சங்க இலக்கிய நூல்கள் பட்டியல்

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் கி.மு. 500இல் இருந்து கி.பி. 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளைஉ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன.

சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

எட்டுத்தொகை நூல்கள் 

எட்டுத்தொகை நூல்கள் (மொத்த நூல்கள் 8)

நூல் காலம் இயற்றியவர்
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு கபிலர்
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை நல்லந்துவனார் முதலிய பலர்
அகநானூறு பலர்
புறநானூறு பலர்

பத்துப்பாட்டு நூல்கள்

பத்துப்பாட்டு நூல்கள் (மொத்த நூல்கள் 10)

நூல்  காலம் இயற்றியவர்
திருமுருகாற்றுப்படை 8-ம் நூ.ஆ. நக்கீரர்
பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை 4 – 6ஆம் நூ.ஆ. நற்றாத்தனார்
பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை 2 – 4ஆம் நூ.ஆ. நக்கீரர்
குறிஞ்சிப் பாட்டு கபிலர்
முல்லைப்பாட்டு நப்பூதனார்
மதுரைக் காஞ்சி 2 மற்றும் 4 -ம் நூ.ஆ. மாங்குடி மருதனார்
பட்டினப் பாலை 3 ம் நூ.ஆ.
மலைபடுகடாம்  2 மற்றும் 4 -ம் நூ.ஆ. பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (மொத்த நூல்கள் 18)

நூல்  காலம் இயற்றியவர்
திருக்குறள்  கி. மு 31 திருவள்ளுவர்
நான்மணிக்கடிகை 6 ஆம் நூ.ஆ. விளம்பி நாகனார்
இன்னா நாற்பது 5 ஆம் நூ.ஆ. கபிலதேவர்
இனியவை நாற்பது 5 ஆம் நூ.ஆ. பூதஞ்சேந்தனார்
களவழி நாற்பது 5 ஆம் நூ.ஆ. பொய்கையார்
திரிகடுகம் 4 ஆம் நூ.ஆ. நல்லாதனார்
ஆசாரக்கோவை 7 ஆம் நூ.ஆ. பெருவாயின் முள்ளியார்
பழமொழி நானூறு 6 ஆம் நூ.ஆ. மூன்றுரை அரையனார்
சிறுபஞ்சமூலம் 6 ஆம் நூ.ஆ. காரியாசான்
முதுமொழிக்காஞ்சி 4 ஆம் நூ.ஆ. கூடலூர் கிழார்
ஏலாதி 6 ஆம் நூ.ஆ. கணிமேதாவியார்
கார் நாற்பது 6 ஆம் நூ.ஆ. கண்ணன் கூத்தனார்
ஐந்திணை ஐம்பது 6 ஆம் நூ.ஆ. மாறன் பொறையனார்
திணைமொழி ஐம்பது 6 ஆம் நூ.ஆ. கண்ணன் பூதனார்
ஐந்திணை எழுபது 6ஆம் நூ.ஆ. மூவாதியார்
திணைமாலை நூற்றைம்பது 6ஆம் நூ.ஆ. கணிமேதாவியார்
கைந்நிலை 6 ஆம் நூ.ஆ. புல்லங்காடனார்
நாலடியார் 7 ஆம் நூ.ஆ. சமணமுனிவர்கள் பலர்

We will be happy to hear your thoughts

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

Tamill eBooks Org
Logo
Register New Account
Reset Password
Shopping cart