இந்திய தண்டனைச் சட்ட புத்தகம்

இந்திய தண்டனைச் சட்ட புத்தகம் PDF

  • இந்திய தண்டனைச் சட்ட புத்தகம் PDF Free Download
Add your review

இந்திய தண்டனைச் சட்ட புத்தகம் PDF Free Download

இந்திய தண்டனைச் சட்டம் (IPC) என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ குற்றவியல் சட்டத்தொகுப்பு ஆகும். இது குற்றவியல் சட்டத்தின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கும் ஒரு விரிவான சட்டத்தொகுப்பு. லார்ட் தாமஸ் பாபிங்டன் மக்காலே (Thomas Babington Macaulay) தலைமையில் 1833 ஆம் ஆண்டு சாசனச் சட்டத்தின் கீழ் 1834 இல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த சட்டத்தொகுப்பு உருவாக்கப்பட்டது.

இந்த சட்டத்தொகுப்பு பின்னர் பல முறை திருத்தப்பட்டது மற்றும் இப்போது பிற குற்றவியல் விதிகளால் கூடுதலாக வழங்கப்படுகிறது.

பிரிட்டிஷ் இந்தியப் பேரரசின் பிரிவினைக்குப் பிறகு, இந்திய தண்டனைச் சட்டம் பாக்கிஸ்தானில் அது பாகிஸ்தான் தண்டனைச் சட்டம் என்றும்,  வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்த பிறகு, அங்கும் இதே  சட்டம் அமலில் உள்ளது.

வரலாறு

1834 இல் தாமஸ் பாபிங்டன் மக்காலே தலைமையிலான முதல் சட்ட ஆணையத்தால் இந்திய தண்டனைச் சட்டத்தின் வரைவு தயாரிக்கப்பட்டது மற்றும் 1835 இல் இந்திய கவுன்சில் கவர்னர் ஜெனரலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் முதல் இறுதி வரைவு 1837 ல் இந்திய கவர்னர் ஜெனரலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது, ஆனால் வரைவு மீண்டும் திருத்தப்பட்டது. வரைவு 1850 இல் நிறைவடைந்தது மற்றும் இச்சட்டம் 1856 இல் சட்டமன்றத்திற்கு அனுப்பபட்டது. இந்த வரைவு பின்னர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற பார்ன்ஸ் அவர்களால் மிகவும் கவனமாக திருத்தப்பட்டது. பின்பு அக்டோபர் 6, 1860 இல் சட்டமாக்கப்பட்டு ஜனவரி 1, 1862 அன்று செயல்பாட்டுக்கு வந்தது. மக்காலே 1859 ஆம் ஆண்டின் இறுதியில் இறந்துவிட்டதால், அவர் எழுதிய தண்டனைச் சட்டம் நடைமுறைக்கு வந்ததைப் பார்க்க அவருக்கு கொடுத்துவைக்கவில்லை.

ஜம்மு -காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 370, 2019 -ன் அடிப்படையில், 31 அக்டோபர் 2019 -ல் ஜம்மு -காஷ்மீரில் இந்த இந்திய தண்டனைச் சட்ட புத்தகம் அமலுக்கு வந்தது.

 

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “இந்திய தண்டனைச் சட்ட புத்தகம்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இந்திய தண்டனைச் சட்ட புத்தகம்
இந்திய தண்டனைச் சட்ட புத்தகம்
Tamill eBooks Org
Logo
Register New Account
Reset Password
Shopping cart