1001 அரேபிய இரவுகள் பாகம் 4

Sale!

0.0049.00

Clear
eBook Format

ePub, Mobi (Kindle), PDF

1001 Nights Tamil PDF read Online (part 4)

ஆயிரத்தோர் இரவுகள் eBook Free Download

ஆயிரத்தோர் இரவுகள் PDF | ePub | Mobi

Add your review

1001 இரவிற் சொல்லிய அரபுக் கதைகள்

உள்ளே … (1001 Arabian Nights Tamil Book Free Download)

 • நூருதீனின் காதல்
 • காதல் பித்தனின் கதை
 • புளுகன் கதை
 • மூலுக் துனியா
 • அரசனின் ஆசை நாயகி
 • பூதங்கள் நடத்திய அழகுப் போட்டி
 • வைரக்கல்லும் கழுகும்
 • பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம்
 • அன்பே! பூதூர்
 • அழகிக்கு அடிமையானான்
 • அக்னிதேவனுக்குப் பலி
 • இதற்கு முடிவே கிடையாதா…
 • நீ மெத்துல்லாவின் கதை
 • அலாவுதீனின் அற்புத சாகசங்கள்
 • ஒரு நாள் ராஜா கதை
 • போலி மன்னர் கதை
 • சோம்பேறியின் கதை
 • காதலர்
 • காதல் பித்தன் கதை
 • யந்திரக் குதிரை ஒன்றின் கதை
 • காதலர்களின் கதை
 • கெய்ரோ நகரத்து அலி
 • ஷகர்ஜாத் சொல்லிய குட்டிக்கதைகள்
 • தொடர்ச்சி…

 நூருதீனின் காதல்

பாஸ்ரா நகரத்தை மன்னர் மகம்மது சுலைமான் ஆண்டு வந்தார். அம் மன்னரின் ஆட்சிக் காலத்தில் நடந்ததுதான் இந்தக் காதல் கதை என்று ஷகர்ஜாத் தன் குயிலினுமினிய குரலால் கதை சொல்ல தொடங்கினாள்.

பாஸ்ரா நகர மன்னர் மகம்மது சுலைமானுக்கு இரண்டு மந்திரிமார் இருந்தனர். மூத்த மந்திரி மோயின் என்பவன். அவன் யாரையும் எடுத்தெறிந்து பேசும் சுபாவமும், கொடிய சித்தமும், பொறாமைக் குணமும் கொண்டவன் இளைய மந்திரி பாதுல் என்பவன் அவன் விவேகமுள்ளவனாகவும், உயர்ந்த லட்சியங்களோடு தூய வாழ்க்கை வாழ்பவராகவும் இருந்தான்.

ஒரு நாள் மன்னர் தன் இரு மந்திரிகளையும் அழைத்தார். “நுண்ணறிவுமிக்க மந்திரிகளே! நம் அரண்மனையில் அறிவும் அழகும் ஒருங்கே வாய்ந்த அடிமைப்பெண் ஒருத்தி கூட இல்லை. உள்ள அடிமைப் பெண்களோ நற்பண்பில்லாதவர்களாயும், நாகரிகம் தெரியாதவர்களாயும் உள்ளனர். ஆகவே அறிவும், அழகும் அமைந்த ஓர் அடிமைப் பெண்ணை நீங்கள் தேர்ந்தெடுத்து அரண்மனைக்குக் கொண்டு வாருங்கள்” என்றார்.

“மாமன்னர் அவர்களே! பத்தாயிரம் தினார்களுக்குக் குறைந்து நீங்கள் விரும்பும் அளவுக்கு ஓர் அடிமைப் பெண் கிடைப்பது அபூர்வம்” என்றார் மூத்த மந்திரி மோயின்

“எப்படியும் தேடிக் கண்டுபிடிக்கலாம்” என்று இளைய மந்திரி பாதுல் கூறினார்.

1001 Arabian Nights Tamil Book Free Download

அந்தப் பொறுப்பை இளைய மந்திரி பாதுல் வசம் ஒப்படைத்து அப்போதே பத்தாயிரம் தினார்கள் மந்திரி வீட்டிற்கு அனுப்பச் சொல்லியும் உத்தரவிட்டார் அரசர் மறுநாள் மந்திரி பாதுல், அடிமைகள் விற்கும் சந்தைக்குச் சென்றார். அங்கே பேரழகு மிக்க ஆரணங்குகள் பலர் விற்பனைக்காகக் கொண்டுவரப் பாடிருந்தனர். அவர்களை ஒவ்வொருவராகப் பார்த்தும் கேள்விகள் கேட்டும், பேச வைத்தும், பாடச் சொல்லியும் பார்த்து வந்தார். ஒருத்திக்குக் குரல் நன்றாக இல்லை; ஒருத்திக்குச் சாதுர்மாம் போதாது; ஒருத்திக்குப் பாடவரவில்லை. ஆனால் பார்வைக்கு எல்லோரும் அழகிகள் தாம்.

ஒருத்தியையும் தேர்ந்தெடுக்க முடியாது மந்திரி பாதுல் சோர்ந்து போய்த் திரும்பினம் வழியில் ஒரு தரகன் அவரைச் சந்தித்து விவரம் கேட்டான்

மாண்புமிக்க மந்திரியார் அவர்களே! என்னோடு வாருங்கள். எகிப்து நாட்டிலிருந்து ஓர் அடிமைப் பெண் விற்பனைக்கு வந்திருக்கிறாள் தாங்கள் விரும்பும்படியே அழகும் அறிவும் பொருந்தியவள் அவள். நீங்கள் பார்த்தீர்களானால் நிச்சயம் அவளைத் தேர்ந் தெடுப்பீர்கள்” என்று கூறினான்.

தரகனோடு மந்திரி போனார். அவன் குறிப்பிட்ட பெண்ணைப் பார்த்தார். அந்தப் பெண் ஒல்லியாயும் உயரமாயும் இருந்தாள். விம்மிப்புடைத்த ஸ்தனங்கள் சிவந்த கன்னங்கள், கருவிழிகள், முத்துப் பல் வரிசை மோகனப் புன் சிரிப்பும் கொண்டு, அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவிக்கப் பட்ட தேவமகள் போல் மின்னினாள்

இப்பேர்ப்பட்ட அழகிக்கு அறிவு எப்படியோ? என்றெண்ணிய பாதுல் அவளைப் பல கேள்விகள் கேட்டார். இலக்கியம், இலக்கணம், சங்கீதம், நாட்டியம் – பலதரப்பட்ட விஷயங்களில் கேள்விகள் கேட்டார். தன் தேனினும் இனிய குரலால் தக்கபதில்களைச் சொல்லி வந்தாள் அடிமைப் பெண். பின்னர் பாடினாள். அந்த தேவகானத்தில் மந்திரி சொக்கிப் போனார். நம் அரசர் விரும்பும் எல்லா குண நலன்களும் பெற்றவள் இவளே என்று நினைத்து இவளுக்கு விலையென்ன?” என்று தரகனைக்

கேட்டார். “இவளுக்கு விலையாகப் பதினாயிரம் தினார்கள் கேட்கிறார். இவளைக் கொண்டு வந்திருப்பவர். அவரை அழைக்கிறேன். நீங்களே விலை பேசிக் கொள்ளலாம்” என்றான் தரகன்.

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “1001 அரேபிய இரவுகள் பாகம் 4”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

1001 அரேபிய இரவுகள் பாகம் 4
1001 அரேபிய இரவுகள் பாகம் 4

0.0049.00

Tamill eBooks Org
Logo
Register New Account
Reset Password
Shopping cart