1001 அரேபிய இரவுகள் பாகம் 3

Sale!

0.0049.00

Clear
eBook Format

ePub, Mobi (Kindle), PDF

1001 nights Tamil PDF red online (part 3)

ஆயிரத்தோர் இரவுகள் eBook Free Download

1001 அரேபிய இரவுகள் பாகம் 3 PDF | ePUb | Mobi

 

Add your review

1001 இரவிற் சொல்லிய அரபுக் கதைகள்

உள்ளே …

 •  நாவிதனால் நொண்டியானவன் கதை
 • நாவிதனின் கதை
 • மூத்த சகோதரன் கதை
 • இரண்டாவது சகோதரனின் கதை
 • மூன்றாவது சகோதரனின் கதை
 • நான்காம் சகோதரனின் கதை
 • ஐந்தாம் சகோதரனின் கதை
 • ஆறாம் சகோதரனின் கதை
 • நூருதீனின் காதல்
 • காதல் பித்தனின் கதை
 • புளுகன் கதை
 • மூலுக் துனியா
 • அரசனின் ஆசை நாயகி
 • பூதங்கள் நடத்திய அழகுப் போட்டி
 • வைரக்கல்லும் கழுகும்
 • பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம்
 • அன்பே! பூதூர்
 • அழகிக்கு அடிமையானான்
 • அக்னிதேவனுக்குப் பலி
 • இதற்கு முடிவே கிடையாதா…
 • நீ மெத்துல்லாவின் கதை

 

  1001 அரேபிய இரவுகள்

ரபு மொழி உலகுக்களித்த அரிய பெரிய செல்வங்கள் இரண்டு. ஒன்று குர்ஆன் மற்றொன்று ஆயிரத்தோர் இரவுகள் எனும் கதைக்களஞ்சியம்.

தமிழ் மொழியினைப் போல் நோக்கப் பரப்பு உண்மை உள்ளீடு, திருந்திய தன்மை, எண்ணத்தில் ஆழம் நாகரிகமரபு , கலைப்பாங்கு. திட்ப நுட்பச் செறிவு எதையும் விளக்கும் சொல்லாற்றல் ஆகிய சிறப்புகள் அரபு மொழிக்குரிய பண்புகளாகும்.

அரபு மக்களின் சமய நூலைப் போலவே ஒப்புயர்வற்ற இலக்கியம் ஆயிரத்தோர் இரவுகள் – வாழ்க்கையின் அனைத்துக்கூறுகளையும், உயர்ந்த கொடுமுடிகளையும் தொட்டுவிட்ட பெருமை இந்நூலுக்குண்டு. உலகத்தின் பட்டறிவுத்தெளிவு உண்மையின் கருத்தூற்று இரண்டும் இந்நூலெங்கும் சந்தனச் சிற்பம் போல் சிந்தனைத் தேனாய் இனித்து மணக்கின்றன.

உலகத்தின் சீன மொழியும் அரபு மொழியும் தான் சமயம் சாராத கதையிலக்கியங்களைப் படைத்த பெருமை கொண்டவை. இரண்டு மொழியுமே மக்கள் இலக்கியத்தின் சீரும் சிறப்பும், பேரும் புகழும் கொண்டவை. மற்ற தொல்பழங்கால மொழிகளில் கிமு -வுக்கு முன்பு அந்தப் பெருமை இருந்தது. கிபி -க்குப் பின் சமயத்தின் சாயம் புகுந்து ஓருருக்கொரு நாட்டுக்கோர் இனத்திற்குரியதாகி விட்டன கதையிலக்கியமும் காவியமும்

ஆனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் அறம், பொருள், இன்பம், இசை , கூத்து, மருந்து, வானியல், சிற்பம், கட்டடம், உயிரியல் முதலிய கலைகள் சமயம் சாராது செழித்துக் கொழித்து வளம் பெற்றதைப்போல், இன்றைக்கு 1700 ஆண்டுகட்கு முன்பே அரபு மொழியில் மேற்கண்ட துறைகள் உலகு உவந்தேற்கத் தன் கொடைப் பொருளாக நின்றன.

பல்வேறு பாங்கில் ஓங்கிநின்ற அராபிய மக்களின் வாழ்வும் கற்பனைத் திறமும் அழியாத வானவில்லைப் போல் ஆயிரத்தோர் இரவுகளில் நிலை கொண்டன

இந்த “ஆயிரத்தோர் இரவுகள்” எனும் இலக்கியம் பழங்காலத்து கருத்து வெளிப்பாடுகளையும் ஆழ்ந்து தெளிந்த அறிவுணர்வுக் காட்சிகளையும், மனித இனம் கண்டும் காணாத உலகத்தைப் பற்றிய உறவையும், உலக வாழ்க்கைத் தெளிவையும், அன்பின் ஆற்றலையும், காதலின் மேன்மையையும் பதித்து வைத்துள்ளது.

அரபுக் கதைகள் எனப்படும் இந்நூலுக்கிணையான ஓர் இலக்கியத்தை உலகின் எந்த மொழியிலும் காண்பது அரிது.

நம் நாட்டின் இராமாயணம், பாரதம், ஜாதகக் கதைகள், கதாசாகரம், இலியது, ஒடிசி காண்டர் பரிகதைகள் சீனக்கதைகள், ஜப்பானியக் கதைகள் அனைத்தும் சேர்ந்து இணைத்துப் பிணைத்தால் ஒருவேளை இந்த ஆயிரத்தோர் இரவுகள் நூலுக்கு இணையாகலாம்.

இத்தகு சிறப்புக்குரிய தன்மைகள் என்ன? வாழ்வின் உச்சாணிக் கிளையில் இருப்பதாகக் கருதப்படும் மாமன்னர் குடும்பங்களிலிருந்து, விலைக்கு விற்கப்பட்ட வாங்கப்பட்ட அடிமைகள் வரை, வீரர்கள், வணிகர்கள் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான போக்கும் நோக்கும் உடைய பெண்கள் என ஆயிரமாயிரம் கதையுறுப் பினர்கள் ஊடாடுகின்றனர். ஒவ்வொரு கதையிலும் மனிதாபி மானத்தின் இழையறாமல் உலகத்தின் எந்தச் சமூகத்திற்கும் ஏற்றவகையில் இக்கதை மாந்தர்கள் அமைந்துள்ளனர்.

மங்காத மொழி அழகும், கருத்துப் பொலிவும், கற்பனை வடிவமும், கதைப் போக்கும் கொண்ட ஆயிரத்தோர் இரவுகள்ஒரு குறிப்பிட்ட ஓர் ஆசிரியராலோ ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள்ளோ தோன்றிய ஒரு படைப்பிலக்கியம் அன்று. 

அரபு நாடுகளிலிருந்து, இசுலாமிய இளம் அனைத்துலக நாடுகளில் ஆட்சியாலும் சமயத்தாலும் பரவிய காலத்திலேயே கியி. 8-ஆம் நூற்றாண்டில் அரும்பி ஊர் பேர் அறியாத கதைவாணர்களின் வாய்மொழி

இலக்கியமாக கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் போதாகி, கற்பனைச் செல்வர்களால் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் மலர்ந்து முழுமை பெற்று இன்று உலகெங்கும் மணம் வீசும் பெருமையுற்றது. 800 ஆண்டுகால வரலாறு சிந்தனை, வாழ்வின் எழுச்சி, அன்றாட வாழ்வின் நிகழ்ச்சிகள் யாவும் இறவாத வடிவம் பெற்றன.

பஞ்சதந்திரம் – இதோபதேசக் கதைகள் போல் கிபி. 10-ஆம் நூற்றாண்டில் அரேபியாவில் ஆயிரம் கதைகள் என்று தோன்றி, பழைய வடிவின் அடிச்சுவடுகள் மறைந்து புதிய வடிவின் புதுச் சுவடுகளை உலகெங்கும் பதித்த ஆயிரத்தோர் இரவுகள் முதலில் பிரஞ்சுமொழியில் அந்தனிகாலன் என்ற பேரறிஞரால் அரபு மொழியிலிருந்து 12 புத்தகங்களாக முதன் முதலில் (1707) மொழி பெயர்க்கப்பட்டது.

அரபு மொழியின் அழகும் கற்பனையும் தெளிவும் மணமும் கொண்ட பிரஞ்சு மொழி பெயர்ப்பு மேலையுலக மொழிகளின் தாடெல்லாம் புகுந்து கற்றார்க்கும் கல்லார்க்கும் புது விருந்தாயிற்று.

இந்தியாவில் இந்நூல் இசுலாத்தின் ஆட்சி காலத்தில் அரபுக்கதைகள் என்ற பெயரில் உருதுவிலும், பின்னர் 17-ஆம் நூற்றாண்டிலேயே வங்க, இந்தி மொழிகளில் அராபிய ரஜனீ அராபிய உபன்யாசா என்ற பெயர்களில் வெளிவந்தது. பல கதைகள் வங்கம் போன்ற மொழிகளில் குறுங்காப்பியங்களாகப் பாடப்பட்டும் உள்ளன.

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “1001 அரேபிய இரவுகள் பாகம் 3”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

1001 அரேபிய இரவுகள் பாகம் 3
1001 அரேபிய இரவுகள் பாகம் 3

0.0049.00

Tamill eBooks Org
Logo
Register New Account
Reset Password
Shopping cart