1001 அரேபிய இரவுகள் பாகம் 2

Sale!

0.0049.00

Clear
eBook Format

ePub, Mobi (Kindle), PDF

1001 அரேபிய இரவுகள் PDF Read Online (Part 2)

1001 Arabian Nights Tamil Book Free Download

1001 அரேபிய இரவுகள் பாகம் 2 PDF | ePub | Mobi

Add your review

1001 இரவிற் சொல்லிய அரபுக் கதைகள்

ரபு மொழி உலகுக்களித்த அரிய பெரிய செல்வங்கள் இரண்டு. ஒன்று குர்ஆன் மற்றொன்று ஆயிரத்தோர் இரவுகள் எனும் கதைக்களஞ்சியம்.

தமிழ் மொழியினைப் போல் நோக்கப் பரப்பு உண்மை உள்ளீடு, திருந்திய தன்மை, எண்ணத்தில் ஆழம் நாகரிகமரபு , கலைப்பாங்கு. திட்ப நுட்பச் செறிவு எதையும் விளக்கும் சொல்லாற்றல் ஆகிய சிறப்புகள் அரபு மொழிக்குரிய பண்புகளாகும்.

அரபு மக்களின் சமய நூலைப் போலவே ஒப்புயர்வற்ற இலக்கியம் ஆயிரத்தோர் இரவுகள் – வாழ்க்கையின் அனைத்துக்கூறுகளையும், உயர்ந்த கொடுமுடிகளையும் தொட்டுவிட்ட பெருமை இந்நூலுக்குண்டு. உலகத்தின் பட்டறிவுத்தெளிவு உண்மையின் கருத்தூற்று இரண்டும் இந்நூலெங்கும் சந்தனச் சிற்பம் போல் சிந்தனைத் தேனாய் இனித்து மணக்கின்றன.

உள்ளே … (1001 Arabian Nights Tamil Book Free Download)

முதல் பாகம் அறிமுகம் மற்றும்…

1001 அரேபிய இரவுகள் பாகம் 2

 •  முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை
 • வணிகனும் பூதமும்
 • மானும் முதியவனும்
 • இரண்டு நாய்களின் கதை
 • கோவேறு கழுதையின் கதை
 • நன்றி கெட்ட பூதத்தின் கதை
 • பூதம் தன் வரலாற்றைக் கூற ஆரம்பித்தது.
 • யூனான் மன்னரின் கதை
 • கிளியின் கதை
 • சிந்துபாத் மந்திரியின் கதை
 • பேசும் வண்ண மீன்கள்
 • அரை மனிதனின் கதை
 • கூலிக்காரனின் கதை
 • முதல் குருடனின் கதை
 • இரண்டாம் குருடனின் கதை
 • மூன்றாம் குருடனின் கதை
 • வஞ்சகச் சகோதரிகள்
 • கலிபா செய்த ஏற்பாடு
 • மூன்று ஆப்பிள் பழக்கதை
 • மந்திரி குமாரர்களின் கதை
 • கூனன் இறந்த கதை
 • வாலிபன் கையிழந்த கதை
 • கட்டைவிரல்களை இழந்தவன் கதை
 • வலதுகை துண்டிக்கப்பட்டவன் கதை

முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை

“தந்தையே! அந்த வணிகர் அடித்த மாதிரி என்னை அடித்தாலும் நான் முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. ஏற்பாடுகளைச் செய்யுங்கள் நான் எப்படியும் மன்னரின் இக்கொடிய செயலுக்கு முடிவு கட்டுவதாக உறுதியெடுத்துக் கொண்டேன்” என்றாள்

ஷகர்ஜாத் பல நூல்களைக் கற்றவள். ஆகவே இனிய சொல்லாற்றலுடன் பல கதைகளைக் கூற வல்லவள் அதோடு அவள் பேரழகியும் கூட

“எல்லாம் வல்ல அல்லாவே! நீயே துணை” என்று சுறி மந்திரி எழுந்து போய்விட்டார், செய்தியை அரண்மனையில் கூற தந்தை அரண்மனை சென்றதும் ஷகாஜாத் தங்கையை அழைத்து “இன்று இரவு அரண்மனை யிலிருந்து உன்னை அழைத்துவர ஆள் அனுப்புவேன் நீ அரண்மனை வந்து தக்க சமயம் பார்த்து மன்னர் ஷாரியர் எதிரில் என்னை ஒரு கதை கூறும்படி கேள்” என்றாள். தங்கை துன்யாஜத்தும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டாள்

அரண்மனையிலிருந்து திருமணத்துக்காக வரிசைப் பொருள்கள் பல குதிரைகளின் மேலும் ஒட்டகங்களின் மேலும் வந்திறங்கின. ஷகர்ஜாத் மணமகளுக்குரிய ஆடையாபரணங்களை அணிந்து கொண்டாள்.

பரிவாரங்கள் சூழ அரண்மனையை அடைந்தாள். முதியவர்கள் ஆசி கூற திரு அல்லாவின் மெய்க்கீர்த்தி ஓதி, பின்னர் வாரியருக்கும் , ஷகாஜாத்துக்கும் திருமணம் நடந்தேறியது.

மணமகள் ஷகர்ஜாத் பள்ளியறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள், அங்கிருந்த வாரியர் அவளின் பேரழகில் சொக்கிப் போனார்; நெடுநேரம் இன்பம் துயத்தனர். இறுதியில் மன்னர் ஷாரியரிடம் “மாமன்னரே! விடிந்ததும் நானே வெட்டப்பட போகிறேன், இன்னும் விடிய வெகுநேரம் இருக்கிறது. இந்நிலையில் எனக்குத் தூக்கம் வரவில்லை. ஆகவே தயவு செய்து என் தங்கை துனியாஜத்தைக் கடைசி முறையாகக் கண்டு விடை பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஷகர்ஜாத் கேட்டாள்

மன்னரும் அவள் விருப்பத்தை நிறைவேற்ற உடனே துனியாஜத்தை அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

சிறிது நேரத்தில் துனியாஜத் பள்ளியறைக்கு அழைத்து வரப்பட்டாள்.

ஷகர்ஜாத் தங்கையை வரவேற்று இறுதி விடை கேட்டுக் கொண்டிருந்தாள். இருவர் கண்களிலும் கண்ணீர் அருவியாய்ச் சொரிந்தது.

பின்னர், துனியாஜத் தன் தமக்கை ஷகர்ஜாத்தை நோக்கி அக்கா, விடிய இன்னும் நெடுநேரம் இருக்கிறதே நான் இங்கேயே உன்னுடன் இருக்கிறேன். நீதான் கதைகள் சொல்வதில் வல்லவள் ஆயிற்றே கடைசியாக எனக்கு ஒரு கதை கூறமாட்டாயா?” என்றாள்.

அரைத் தூக்கத்தில் இருந்த மன்னர் ஷாரியர் கதை என்றதும் எழுந்து உட்கார்ந்து கொண்டார். “பாவம், துனியாஜத்தின் ஆசை தீர விடிவதற்குள் ஒரு கதைதான் சொல்லேன்” என்று ஷகாஜாத்திடம் சொன்னார்

இந்தச் சொல்லை எதிர்பார்த்துக் காத்திருந்த ஷகர்ஜாத் கதை கூற ஆயத்தமானாள் …

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “1001 அரேபிய இரவுகள் பாகம் 2”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

1001 அரேபிய இரவுகள் பாகம் 2
1001 அரேபிய இரவுகள் பாகம் 2

0.0049.00

Tamill eBooks Org
Logo
Register New Account
Reset Password
Shopping cart