Sale!

விலங்குக் கதைகள்

0.009.00

விலங்குக் கதைகள் – குழந்தைகளுக்கு

  • விலங்குக் கதைகள் PDF | ePub | AZW3

 

Description

விலங்குக் கதைகள்

உள்ளே ….

  • பதிப்புரை…..
  • காலொடிந்த கொக்கு..
  • பூனைக் குட்டிகள்..
  • பறவையும் சூரியனும்..
  • நரியும் நாரையும்..
  • வீரமுள்ள சேவல்..
  • கழுதையின் சிந்தனை……
  • அணிலின் கோபம்..
  • ஈயின் விபரீத ஆசை…..
  • குருவியும் குள்ளநரியும்..
  • புலியின் சிந்தனை……

பதிப்புரை

சிறுவர் முதல் முதியோர்வரை யாவரும் விரும்பிப் படிப்பது கதை நூல்கள்தான். சின்னஞ்சிறு சிங்காரச் சிறுவர்கள் விரும்புகின்ற முறையில் கதை சொல்வதும் எழுதுவதும் தனிக் கலை ஆகும்.

புகழ் பெற்ற பஞ்ச தந்திரக் கதை களைப் போல் புலவர் கோவேந்தன் எழுதிய இந்தக் கதைப் புத்தகம் விலங்குகளைப் பேச வைத்துச் சிறுவர்களுக்குச் சிறந்த நீதிகளை எடுத்துச் சொல்கிறது.

இந்தக் கதைகளில் கொக்கு, நரி,நாரை, சேவல், பூனை முதலிய விலங்குகள் பேசுகின்றன.

இங்தக் கதை நூலைத் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வாங்கி ஆதரிக்க வேண்டுகிறோம்.

– பதிப்பகத்தார்

காலொடிந்த கொக்கு

முன்னொரு காலத்தில் ஏழை ஒருவனிருந்தான். அவனுக்குக் கொஞ்சம் நிலமிருந்தது. அதைத் தன் ஜீவனோபாயமாகக் கொண்ட அவன் இரவு பகலாக அதில் பாடுபட்டு வந்தான்.

வசந்த பருவம் வந்தது. வழக்கம்போல நிலத்தை உழத் தொடங்கினான் அந்த ஏழை. அப்போது தற்செயலாக ஆகாயத்தை நோக்கினான் அவன். ஒரு கொக்கு பறந்து கொண்டிருப்பதைக் கண்டான். அந்தக் கொக்கு உழவோட்டப் பட்டிருந்த கழனியை நோக்கி வந்த்து. ஆனால் அது உடனே பூமியில் தொப்பென்று விழுங்து

விட்டது. அதைப் பார்த்து ஏழை அங்கு விரைந்து ஓடினான். அதன் சிறகு { ஒடிந்திருந்ததைக் கண்டு தன் வீட்டுக்கே அதை எடுத்துச் சென்றான்.

சிறகு ஒடிந்த அந்தக் கொக்குக்குத் தன் வீட்டில் சிகிச்சை அளிக்கத் தொடங்கினான் ஏழை. அது தனது இறகுகளை நன்றாகப் பயன்படுத்தத் தெம்பு ஏற்படும் வரை பேணிப் பராமரித்து வந்தான். பிறகு ஒரு நாள் அந்தப் பறவை பறந்து போய் விட்டது.

அந்த ஏழைக் குடியானவன் உழவு வேலையை முடித்து, விதைப்பு ஆரம்பித்த போது, அந்தக் கொக்கு மறுபடி அவனது கழனி மீது பறந்து வந்தது. மூன்று முலாம்பழ விதைகளைக் கீழே போட்டது. அவன் அங்த விதைகளைப் பொறுக்கித் தனது நிலத்தின் ஒரு கோடியில் விதைத்தான். சில நாள்களிலேயே அவை முளை விட ஆரம்பித்தன. அந்த ஏழைக் குடியானவன் அயர்வின்றிக் களையெடுத்தான். செடிகளுக்கு நீர் பாய்ச்சினான். சீக்கிரம் முலாம் பழங்கள் கனிந்து கிடந்தன. அவற்றில் மிகப் பெரிய மூன்று பழங்களைப் பறித்து மிகவும் சிரமப்பட்டு வீட்டுக்குக் கொண்டு போனான். அவை அவ்வளவு கனமாக இருந்தன.

வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்து நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்தான் அந்தக் குடியானவன். முலாம் பழங்களில் ஒன்றை எடுத்து, அதை நறுக்கி விருந்து படைக்க நினைத்தான். ஆனால் கத்தியினால் முலாம் பழத்தின் மேல் தோலைக் கூட அவனால் கிழிக்க முடியவில்லை. அவ்வளவு கெட்டியாக இருந்தது. மற்ற பழங்களை எடுத்து நறுக்க முயன்றான்; அவற்றையும் நறுக்க முடிய வில்லை.

எனவே ஒரு பெரிய கத்தியை எடுத்துத் தன் பலத்தையெல்லாம் சேர்த்து ஓங்கி ஒரு போடு போட்டான். முலாம் பழம் விரிசல் கண்டது. அதன் உள்ளே சாறு இருப்பதற்குப் பதிலாக, தங்க நாணயங்கள் இருந்தன. மற்ற இரண்டு,முலாம் பழங்களிலுங் கூட தங்க நாணயங்கள் இருந்தன. ⁠ஏழைக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அங்தத் தங்க நாணயங்களை

எல்லாம் எடுத்துத் தன் விருந்தாளிகளுக்கு பங்கிட்டுக் கொடுத்தான். அவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடு சென்றனர் மூன்று முலாம் பழக் கொடிகள் ஒவ்வொன்றிலும் பத்துப் பத்து முலாம் பழங்கள கனிந்தன. அவை அனைத்திலுமிருந்தும் தங்க நாணயங்கள் கிடைத்தன. ஏழை பெரிய பணக்காரனாகி விட்டான்.

⁠பக்கத்தில் ஒரு செல்வந்தன் வசித்து வங்தான். அவன் இந்தக் குடியானவனிடம் வந்து, “நீ எப்படி இவ்வளவு பெரிய பணக்காரனாக கேட்டான்.

⁠முன்பு மிக ஏழையாக இருந்த அந்த நல்ல மனிதன் கடந்த விவரம் முழுவதையும் பணக்காரனிடம் கூறினான்.

⁠ “சரி, நமக்கும் கிடைக்குமா பார்க்கலாம்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அங்தப் பேராசைக்காரன் தனது கழனியை நோக்கிப் போனான். அந்தக் கொக்கு அவன் பார்வையில் பட்டது, அதற்குத் தெரியாமல் வஞ்சகத் தனமாக ஒரு கம்பை எடுத்து அதன் காலை ஒடித்து விட்டான். பிறகு அந்தக் கொக்குக்குச் சிகிச்சை செய்ய அதைத் தன் வீட்டுக்குக் கொண்டு போனான்.

⁠சில நாட்களில் கொக்கு குணமடைந்து பறந்து போய் விட்டது. அந்தப் பணக் காரன் தன் கழனிக்குப் போய் அந்தக் கொக்கை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான். ஒரு நாள், அந்தக் கொக்கு பறந்து வந்து இரண்டு விதைகளைப் போட்டது, அந்த விதைகள் முளைத்து விட்டன. கொடி படர்ந்து, பூவெடுத்து, முலாம் பழங்கள் பழுத்தன.

⁠அது கண்ட அந்தப் பணக்காரன் தன் நண்பர்களையும் உறவினர்களையும் தன்  ⁠வீட்டுக்கு அழைத்தான். ஆனால் அவன் அந்த முலாம் பழங்களை நறுக்கிய போது, அதிலிருந்து கூட்டம் கூட்டமாகத் தேனீக்கள் கிளம்பின.

⁠ஒவ்வொன்றும் ஒரு கொட்டைப் பாக்கு அளவு பெரியதாக இருந்தது. அவை அந்தப் பணக்காரனையும் அவனது உறவினர்களையும் கன்னம், உதடு, கண்ணிமை எல்லாம் வீங்கிப் போகும் வரை கொட்டி விட்டன.

⁠ஆனால் இந்த இரக்கமுள்ள நல்ல மனிதன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தான். பேராசை பிடித்த தன் அண்டை வீட்டுக்காரனை எண்ணி அவன் நகைத்தான்.

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “விலங்குக் கதைகள்”

Your email address will not be published. Required fields are marked *