Sale!

வளையாபதி

49.00

வளையாபதி மூலமும்-உரையும் eBook

[rehub_affbtn btn_text=”Free For Pro Memners Only” btn_url=”https://www.tamilebooks.org/download/%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf/”]

வளையாபதி மூலமும்-உரையும் PDF, ePub, Mobi (Kindle)

Description

வளையாபதிமூலமும் உரையும்

வளையாபதி என்பது தமிழில் கூறப்படும் ஐந்து பெரும் காப்பியங்களில் ஒன்றாகும்.  இந்நூல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தது என கருதப்படுகிறது மேலும் இந்நூல் கிடைத்த சில பாடல்களைக் கொண்டு  வளையாபதி நிச்சயம் சமண சமயத்தைச் சார்ந்த ஒரு நூல் என கருதப்படுகின்றது. 

ஐந்து பெரும் காப்பியங்கள்

  1. சிலப்பதிகாரம்,
  2. மணிமேகலை,
  3. குண்டலகேசி,
  4. வளையாபதி,
  5. சீவக சிந்தாமணி

 வளையாபதி நூலை இயற்றிய ஆசிரியர் மற்றும் இந்த நூலில் கூறவரும் கதை என்று எதுவும்  நமக்கு தெரியவில்லை.

வளையாபதி என்ற சொல் பெண்களின் கை அணியாகிய வளையலைக் குறிக்கின்றது. தமிழ் இலக்கியங்களில் வளை என்ற சொல் மிகுதியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.  பழங்காலத்தில் தங்களால் வளையல்களை செய்தனர்,  பிற்காலத்தில் உலோகங்களால் வளையல்களை செய்தனர்,  இதில் பொன்னால் செய்யப்பட்ட வளையல்களை மிகுதியாகும்.

வளையாபதியின் கதை நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. நூல் முழுவதும் கிடைக்காமையே அதற்குக் காரணம். வளையாபதியைப் பற்றிய குறிப்புகள் யாப்பருங்கல விருத்தியுரை, இளம்பூரணர் உரை, நச்சினார்க்கினியர் உரை, இவைகளிலிருந்து தெரிகிறோம்.

வளையாபதி சமணக்காப்பியம் என்பதும், சைன சமயத்தைச் சார்ந்தது என்பதும் அவர்பாடல்களிருந்துத் தெளிவாகிறது.

பதினான்காம் நூற்றாண்டில் தொகுக்கப்பெற்ற புறத் திரட்டிலிருந்து வளையாபதியில் உள்ள 66 பாடல்கள் கிடைக் கின்றன. அவை கீழ்க்கண்ட அதிகாரங்களில் உள்ளன.

  • பிறவி பெறுதற்கருமை
  • கற்புடை மகளிர்
  • கற்பில் மகளிர்
  • புதல்வரைப் பெறுதல்
  • அடக்கமுடைமை
  • பிறர்மனை நயவாமை
  • தீவினையச்சம்
  • தானம்
  • அருளுடைமை
  • புலால் மறுத்தல்
  • தவம்
  • புணர்ச்சி
  • விழையாமை
  • கள்ளாமை
  • பொய்யாமை
  • கொல்லாமை
  • செல்வநிலையாமை
  • இளமை நிலையாமை
  • பல்வகை நிலையாமை –
  • துறவு மெய்யுணர்தல்
  • பழவினை
  • நாடு
  • பொருள்செயல்வகை
  • நட்பு
  • பேதைமை
  • புல்லறிவான்மை
  • பொதுமகளிர்
  • பண்புடைமை
  • நல்குரவு

இவற்றை நன்கு ஆராயும்போது, பொதுவா. நூலாசிரியர் அறவொழுக்கத்தையே அதிகம் வற்புறுத்துகிறா என்று கருதலாம்.

வளையாபதி நூலின் தன்மை

வலையாபதி நூலானது இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் அமைந்த  பாடல்களால் ஆனது என்பது  கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு  கூறமுடிகின்றது. 

வளையாபதி ஆசிரியர் சங்க இலக்கியம், திருக்குறள் போன்ற நூல்களிலிருந்து மிகுதியான தொடர்களை எடுத்து ஆள்கின்றார். தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் நன்கு கற்றவர் என்பது அவருடைய பாடல்களிலிருந்து தெரிகிறது. சான்றாக,

மாவென்று உரைத்து மடலேறுப மன்றுதோறும் பூவென்றெருக்கின் இணர்சூடுப, புன்மை கொண்டே பேயென் றெழுந்து பிறரர்ப்பவும் நிற்ப, காம நோய்நன்கெழுந்து நனிகாழ்க் கொள்வ தாயினக்கால்

மாஎன மடலும் ஊர்ப, பூ எனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகின் ஆர்க்க வும் படுப் பிறிதும் ஆகுப காமம் காழ்க் கொளினே.

குறு. 17

பல திருக்குறள்களைப் பல இடங்களில் கருத்துக்களை எடுத்து ஆள்வதோடு, தொடர்களையும் அவ்வாறு எடுத்து ஆள்கின்றார். யாகாவராயினும் நாகாக்க காவாக்கால், சோகாப்பர் சொல் இழுக்கப்பட்டு என்ற குறளை நாக்கல்லது இல்லை நனிபேணுமாறே என்ற தொடரில் அமைகிறார்.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்? பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை

குறள். 345

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்? பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை அவை உள்வழிப்
பற்றா வினையாய்ப் பல பல யோனிகள்
அற்றா யுழலும் அறிதற்கு அரிதே

வைசிய புராணத்தில் உள்ள பஞ்சகாவியத் தலைவரின் வைரவாணிகன் வளையாபதி பெற்ற சருக்கம் என்று தலைப்பிட பெற்றுள்ள கதைச்செய்திகள் வளையாபதி காப்பியத்திற்குப் பொருந்தாது.

வளையாபதி காலம்

விருத்த யாப்பில் இயற்றப் பட்ட நூல்களில் இது மிகப் பழையது என்று வையாபுரிப் பிள்ளை அவர்கள் சாற்றி வளையாபதி கி.பி. 10-ஆம் நுற்றாண்டின் முற்பாதியதாக இருக்கலாம் என்று சொல்வார். ஆனால்,  அது கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் முற்பாதியதாகுமெனச் மு.அருணாசலம் அவர்கள் சொல்வார்.

உ.வே.சா – வளையாபதி

வளையாபதி என்னும் இந்த பெருங்காப்பியம் இன்றைக்கு நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்றாலும் சென்ற நூற்றாண்டு வரை குறிப்பாக சொல்லப்போனால் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை முழுவதும் தொலையாமல் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கூறுவதற்கு முக்கியமான காரணம் உ வே சாமிநாதர்  திருவாடுதுறை  ஆதீனத்தில்  உள்ள நூலகத்திற்கு சென்றிருந்த பொழுது வளையாபதி நூலின் சுவடி ஒன்றை தம் கண்களாலேயே கண்டதாக,  தன்னுடைய “என் சரித்திரம்” எனும் நூலில் (உ வே சா -வின் வாழ்க்கை வரலாறு) குறிப்பிட்டுள்ளார்.

அந்த காலகட்டத்தில் தான் பழைய  தமிழ் நூல்களை  பாதுகாக்கும் முயற்சியில்  அக்கறை இல்லாமல் இருந்ததால் அந்த நூலின் மதிப்பு தெரியாமல் இருந்ததாகவும்,  பிறகு பழைய தமிழ் நூல்களை அழிவிலிருந்து காக்கும் பணியில் ஈடுபடும் பொழுது திருவாடுதுறை ஆதீன நூலகத்திற்குச் சென்று பார்த்ததாகவும்,  அப்பொழுது வளையாபதி ஓலைச்சுவடியை அங்கு காணவில்லை என்றும் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றார்.

வளையாபதி: 72 செய்யுள்கள்

இப்போது 72 செய்யுள்கள்தாம் நமக்குக் கிட்டியுள்ளன.

அந்த 72 செய்யுள்களில் 66 செய்யுள்கள் 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டு என்னும் தொகைநூலிலும், 3 செய்யுள்கள் சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாகவும், 2 செய்யுள்கள் யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலின் பெயர்தெரியாத ஓர் அறிஞரால் இயற்றப்பட்ட விருத்தியுரையில் மேற்கோளாகவும், இளம்பூரணரின் தொல்காப்பிய உரையில் மேற்கோளாக் காணப்படுவதும் கடவுள் வாழ்த்துச் செய்யுளென்று கருதப்படுவதுமாகிய எஞ்சிய 1 செய்யுள் நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோளாகவும் கிட்டின.

வளையாபதி சமண சமய நூல்

புலால் மறத்தல், கொல்லாமை, நிலையாமை. வினை, பொதுமகளிர் முதலிய தலைப்புகளால் நூல் சைன சமயத்தை மிகவும் எடுத்தக்கூறுகிறது என்பது தெளிவாகப் புலப்படுத்து கின்றது. 66 (புறத்திரட்டு) பாடல்களில் 30 பாடல்கள் சிற்றின்பத்தை வெறுத்துப் பாடுவன. ஆகவே ஆசிரியர் துறவைப் பெரிதும் வலியுறுத்துகின்றார் என்பதும் விளங்கும்.

வளையாபதி கதை

இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இக் காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது.

—-

வளையாபதி கடவுள் வாழ்த்துப் பாடல்

வளையாபதியின் ஆசிரியர் பெயர்த் தெரியவில்லை. தொழுவல் தொல்வினை நீங்குக என்று கூறும் கடவுள் வாழ்த்துப் பாடலில் அருகப்பெருமானின் துதியாக உள்ளது. மேலும், அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டும் துக்கம் துடைக்கும் என்று பாடலில் நிக்கந்த வேடத்து இருடி கணங்கள் என்னும் தொடர் காணப்பெறுகிறது. இதில் வரும் நிக்கந்தன் அருகப் பெருமானைக் குறிப்பதாகும்.

Additional information

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

Reviews

There are no reviews yet.

Be the first to review “வளையாபதி”

Your email address will not be published. Required fields are marked *