Sale!

மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்

(1 customer review)

0.009.00

மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்

 FREE DOWNLOAD AZW3/ePub/PDF

Description

மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் Read Online

முல்லை முத்தையா

உள்ளே …

  • மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்
  • சிங்கத்தை வெற்றி கொண்ட கொசு
  • எந்த விரல் முக்கியம்?
  • எளியோரை அழிப்பது எளிது?
  • ஏட்டிக்குப் போட்டி
  • சாமர்த்தியமான சோதிடன்
  • விவசாயி அடைந்த வருத்தம்
  • ஆபத்து வேளையில் உதவியவர்
  • பொது அறிவு இல்லாதவன்
  • உயிரைக் காப்பாற்றிய கை
  • ஆசை அழிவை உண்டாக்கும்
  • குடியானவனின் மனக்கோட்டை
  • நிலத்தில் கிடைத்த மோதிரம்
  • காக்கையின் பகுத்தறிவு
  • பணக்காரனுக்குத் தூக்கம் வருமா?
  • அற்பப்புத்தி உடையவன்
  • அறிவிப்புப் பலகை இருக்கக் கூடாதா?
  • எதையும் எளிதில் மாற்ற முடியுமா?
  • கடவுள் வேற்றுமை காட்டுவாரா?
  • தாத்தாவை திணறச் செய்தான்
  • தவறு யாருடையது?
  • தங்கையின் பரிவு
  • முதலாளி சொல்லாத வழி
  • பணத்தைச் சேமிப்பது எப்படி?
  • எது கிடைத்தாலும் மகிழ்ச்சியே
  • பெரிய வாயாடி
  • கோயில் கட்டி வைத்த பலன்
  • அன்பு வழியே சிறந்தது
  • செத்த எலியால் வியாபாரி ஆனான்
  • உண்மையான நண்பன்
  • சிறப்பானவன் எவன்?
  • பண்புள்ள பையன்
  • பால்கோவாவுக்காக உயிரை விட்டவன்
  • ஊராரை ஏமாற்றி பறிகொடுத்தான்
  • ஏமாந்த சகோதரர்கள்
  • பிறவிப் பகை நட்பாக முடியாது
  • ஆப்பை அசைத்த குரங்கு
  • உதவியும் ஒத்துழைப்பும்
  • ஆற்றிலே மூழ்குவதே நல்லதா?
  • உயிர் இனங்களுக்குள் உதவி
  • கடல் எவ்வளவு பெரிது?
  • ஆண்டிகள் கூடி மடம் கட்டுதல்
  • பயமும் பீதியும் கொண்டு செத்தனர்
  • கார் இருப்பது எதற்காக?
  • எளியவர்களால் உதவ முடியும்
  • ஒற்றுமையே வலிமை
  • துறவிக்கு உண்டான மதிப்பு
  • சுற்றிச் சுற்றி வரும் பாசம்
  • புத்திசாலி வேடன்
  • சந்நியாசி சம்சாரி ஆனான்
  • குழந்தையிடமிருந்து கற்றுக் கொண்டாள்
  • விவசாயிக்குக் கிடைத்த பரிசு
  • துறவியின் பொறுமை
  • முட்டாள் மகன்
  • புத்திசாலி பிழைப்பான்
  • கொஞ்சமாவது படித்திருக்கிறாயா
  • தண்டனையில் பங்கு உண்டா?
  • எதைத் திருடினான்
  • மூத்தவனுக்கு ஏற்பட்ட மதிப்பு
  • எது நியாயம்
  • சிக்கனமாக இருப்பது எப்படி?

சிங்கத்தை வெற்றி கொண்ட கொசு

காட்டில் படுத்திருந்த சிங்கத்திடம் போய் ஒரு கொசு பேசத் தொடங்கியது.

“என்னைவிட நீ பலசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் அல்லவா? அது மிகவும் தவறு.

“உன் வலிமை எப்படிப்பட்டது? பற்களை நறநற என்று கடித்து, நகங்களால் பிறாண்டுகிறாய், இது எப்படி இருக்கிறது என்றால், ஏழைப் பெண் தன் கணவனுடன் சண்டையிடுவதைப் போலத்தான் இருக்கிறது. சரி, வா, நாம் இருவரும் சண்டை போட்டுப் பார்ப்போம்” என்றது உடனே இது ‘ங்ஙொய்’ என்று ரீங்காரம் செய்து கொண்டு சிங்கத்தின் மீது பறந்து, அதன் நாசியிலும், தாடையிலும் கடிக்கத் தொடங்கியது.

சிங்கம் கொசுவை விரட்ட, தன் நகங்களால் முகத்தைப் பிறாண்டியும், தட்டியும் தோலைக் கிழித்துக் கொண்டதில், இரத்தம் வழிந்ததோடு, களைத்தும் போய் விட்டது.

வெற்றி முழக்கத்தோடு கொசு பறந்து சென்றது. சிறிது நேரத்தில் அந்த கொசு ஒரு சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டது. சிலந்தி கொசுவின் இரத்தத்தை உறிஞ்சியது.

“வலிமை மிகுந்த சிங்கத்தையே வெற்றி கொண்டு, இப்போது ஒர் சிறிய சிலந்தி என்னை வதைத்துக் கொண்டிருக்கிறதே” என்று கொசு வருந்தியது.

Additional information

Authors Name

eBook Format

AZW3 (Kindle), ePub, PDF

1 review for மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்

  1. saravananarunachalam

    சிறுவர் கதைகள் அனைத்தும் அருமை .எளிய நடையில் மாணவர்கள் மட்டுமல்ல அனைத்து வயதினரும் கேட்டு மகிழ சிறந்த தளம் .ஆடியோ வடிவிலும் வழங்கலாம் .நன்றி

Add a review

Your email address will not be published. Required fields are marked *