பாரதியார் கவிதைகள் தொகுப்பு
பாரதியார் கவிதைகள்
பாரதியார் கவிதைகள் மற்றும் தமிழ் மீது அவற்கொண்ட காதல் பற்றி புரிந்துகொள்ள பாரதியின் ஒரு கவிதை இதோ..
“ தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? ”
பாரதியார் தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” எனக் கவிபுனைந்தார்.
சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர்.
அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.
பாரதியார் கவிதைகள் பட்டியல்
தேசிய கீதங்கள் – பாரத நாடு (பாரதியார் கவிதைகள்)
1 வந்தே மாதரம்
2 வந்தே மாதரம்
3 நாட்டு வணக்கம்
4 பாரத தேசம்
5 பாரத நாடு
6 எங்கள் நாடு
7 ஜயபாரதம்
8 பாரத மாதா
9 எங்கள் தாய்
10 வெறி கொண்ட தாய்
11 பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி
12 பாரத மாதா நவரத்தின மாலை
13 பாரத தேவியின் திருத் தசாங்கம்
14 தாயின் மணிக்கொடி பாரீர்
15 பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
16 போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்
17 பாரத சமுதாயம்
18 ஜாதீய கீதம்
19 ஜாதீய கீதம்
தேசிய கீதங்கள் தமிழ்நாடு (பாரதியார் கவிதைகள்)
1 செந்தமிழ் நாடு
2 தமிழ்த்தாய்
3 தமிழ்
4 தமிழ்மொழி வாழ்த்து
5 தமிழச் சாதி.
6 வாழிய செந்தமிழ்!
சுதந்திரம்
1 சுதந்திரப் பெருமை
2 சுதந்திரப் பயிர்
3 சுதந்திர தாகம்
4 சுதந்திர தேவியின் துதி
5 விடுதலை
6 சுதந்திரப் பள்ளு
ஞானப் பாடல்கள் (பாரதியார் கவிதைகள்)
1 அச்சமில்லை
2 ஜய பேரிகை
3 சிட்டுக் குருவியைப் போலே
4 விடுதலை வேண்டும்.
5 வேண்டும்.
6 ஆத்ம ஜயம்
7 காலனுக்கு உரைத்தல்
8 மாயையைப் பழித்தல்
9 சங்கு
10 அறிவே தெய்வம்
11 பரசிவ வெள்ளம்
12 பொய்யோ?மெய்யோ?
13 நான்
14 சித்தாந்தச் சாமி கோயில்
15 பக்தி
16 அம்மாக்கண்ணு பாட்டு
17 வண்டிக்காரன் பாட்டு
18 கடமை அறிவோம்
19 அன்பு செய்தல்
20 சென்றது மீளாது
21 மனத்திற்குக் கட்டளை
22 மனப் பெண்
23 பகைவனுக்கருள்வாய்
24 தெளிவு
25 கற்பனையூர்
பல்வகைப் பாடல்கள் (பாரதியார் கவிதைகள்)
- புதிய ஆத்திசூடி
- கொட்டு முரசே கவிதை !
- பாப்பாப் பாட்டு
பாரதியார் சமூக கவிதைகள்
1 புதுமைப் பெண்
2 பெண்கள் வாழ்க!
3 பெண்கள் விடுதலைக் கும்மி
4 பெண் விடுலை
5 தொழில்
6 மறவன் பாட்டு
7 நாட்டுக் கல்வி
8 புதிய கோணங்கி
சுப்பிரமணிய பாரதி
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.
பாரதியார் கவிதைகள்
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி
– பாரதி.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்
– பாரதி.
There are no reviews yet.