ஐந்திணை எழுபது மூலமும் உரையும்

Authors Name

"இலவசமாக மின் புத்தகங்கள் பதிவிறக்க: Login/SignUp"

ஐந்திணை எழுபது eBook

ஐந்திணை எழுபது மூலமும் உரையும்

# இந்த புத்தகத்தை eBook (ePub, MOBI)  வடிவில் மாற்ற உதவி தேவை….

Add your review

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்களுள் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படும் 18 நூல்கள் கொண்ட தொகுதியுள் அடங்குவது. அகப்பொருள் சார்ந்த இந்நூலை எழுதியவர் மூவாதியார் என்னும் புலவர். கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.

ஐந்திணைகள் என்பன முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்து வகையான பண்டைத் தமிழர் நிலப்பகுப்புகளாகும். இவ்வைந்து திணைகளையும் பின்னணியாகக் கொண்டு திணைக்கு 14 பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது. இந்நூலில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற அடைவில் திணைகள் அமைந்துள்ளன. பாலை நிலம் முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்புகெட்டுத் தோன்றுவது ஆதலானும், நான்கு திணைகளுக்கும் பொதுவாய் ‘நடுவண் ஐந்திணை’ என்று சிறப்பிக்கப் பெறுவதனாலும் பாலைத் திணை இதில் நடுவில் அமைக்கப்பட்டு உள்ளது என்பர்.

அகப்பொருள் சார்ந்த ஏனைய பல தமிழ் இலக்கிய நூல்களைப் போலவே, இதுவும் காதல் வயப்பட்ட உள்ளங்களின் அக உணர்வுகளை அக்கால சமூக வாழ்க்கை முறைகளினதும், பண்பாட்டினதும் பின்னணியிலும், அத்தகைய வேறுபட்ட உணர்வுகளுக்குப் பொருத்தமான நிலத்திணைகளின் பின்னணியிலும் எடுத்துக்கூறுகின்றது.

எடுத்துக்காட்டு பாடல் 

இனத்த வருங்கலை பொங்கப் புனத்த
கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி
யானும் அவரும் வருந்தச் சிறுமாலை
தானும் புயலும் வரும்.

ஆய்வுக் கருத்துகள்

மற்றொரு பதினெண் கீழ்க்கணக்கு நூலான ஐந்திணை ஐம்பதை அடியொற்றி இந்நூல் எழுதப்பட்டு இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. எனவேதான் இவ்விருநூல்களுக்கும் இடையில் பெயர் ஒற்றுமை இருக்கிறது எனக் கூறப்படுகிறது. மேலும் இருநூல்களிலும் சில அடிகளும் கருத்துகளும் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஐந்திணை ஐம்பதில் உள்ள 38 ஆம் பாட்டில், “கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி” என்னும் வரிகள் அப்படியே, ஐந்திணை எழுபதில் உள்ள 36ஆம் பாட்டில் “கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி” என இடம்பெற்று உள்ளன.

இந்நூலின் தொடக்கத்தில் விநாயகரைப் பற்றி கடவுள் வணக்கப் பாடல் ஒன்று சில பிரதிகளில் காணப்படுகிறது. இக்கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாக இருப்பதாலும் இப்பாடலுக்கு பழைய உரைகாரர் உரை எழுதாததாலும் இது நூலாசிரியரான மூவாதியாரால் இயற்றப்பட்டு இருக்காது எனக் கருதப்படுகிறது.

ஐந்திணை எழுபது குறிப்புகள்

ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந் நூல் அமைந்துள்ளமையினால், ஐந்திணை எழுபது என்னும்பெயர் பெறுவதாயிற்று. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற அடைவில் திணைகள் அமைந்துள்ளன. பாலை நிலம் முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்புகெட்டுத் தோன்றுவது ஆதலானும், நான்கு திணைகளுக்கும் பொதுவாய் ‘நடுவண் ஐந்திணை’ என்று சிறப்பிக்கப் பெறுவதனாலும் பாலைத் திணையை இவரும் நடுநாயகமாய் அமைத்துள்ளார் போலும்!

இந் நூலை ஆக்கியவர் மூவாதியார். இவரைச் சிலர் சமணர் என்று கூறுவர். அதற்குத் தக்கசான்று யாதும் இல்லை. இவரைப் பற்றி வேறு ஒன்றும் அறியக்கூடவில்லை.

நூற்பெயர் ஒற்றுமையாலும், வேறுசில குறிப்புகளாலும் இவர் ஐந்திணை ஐம்பதை அடியொற்றியுள்ளனரோ என்று தோன்றுகிறது.

கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெற

என்ற ஐந்திணை ஐம்பதும் (38),

கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி

என வரும் ஐந்திணை எழுபதும் (36), ஒரே அச்சில் வார்த்தால் போன்றவை.

இந் நூலின் முதலில் விநாயகரைக்குறித்த கடவுள் வணக்கப் பாடல் ஒன்று சில பிரதிகளில் காண்கிறது. இக்கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாதலோடு, இதற்குப் பழைய உரைகாரர் உரை எழுதாமையாலும், இச் செய்யுள் நூலாசிரியரே இயற்றியது என்று துணிந்து கூற இயலாது. இச் செய்யுளின் நடைப் போக்கும் ஏனைய பாடல்களினும் வேறுபட்டுள்ளது. ஐந்திணை நூல்களில் வேறு ஒன்றிற்கும் கடவுள் வாழ்த்துப்பாடல் இல்லாமையும் ஈண்டுச் சிந்தித்தற்கு உரியது. இச்செய்யுள் அனந்தராமையர் பதிப்பைத் தவிர (1931), அதற்கு முந்திய பதிப்புகளில் இல்லை. எனவே, இப் பாடல் ஆசிரியர் இயற்றியது அன்று என்றே கொள்ளலாம். எனினும், அனந்தராமையர் பதிப்பில் கொடுக்கப் பெற்றுள்ளமைபற்றி, மிகைப் பாடலாக, இப் பதிப்பிலும் நூல் இறுதியில் இணைக்கப் பெற்றிருக்கிறது.

இந் நூலில் உள்ள எழுபது பாடல்களில் முல்லைத் திணையில் இரண்டு பாடல்களும் (25, 26) நெய்தல் திணையில் இரண்டு பாடல்களும் (69, 70) இறந்துபட்டன.

‘முட முதிர் புன்னை’ எனத் தொடங்கும் ஒரு பாடல் 69-ஆம் செய்யுளாக இலக்கண விளக்க ஆசிரியர் பரம்பரை திரு. சோமசுந்தர தேசிகர் பதிப்பில்(1926) காணப்படுகிறது. திரு. அனந்தராமையர் பதிப்பில் இது தரப்படவில்லை. இப் பதிப்பின் பொருட்டு ஒப்புநோக்கிய ஏட்டுச்சுவடிகளிலும் இது கிடைக்கப் பெறவில்லை. தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் இதனைக் ‘காமம் சிறத்தல்’ என்னும் துறைக்கு மேற்கோள் காட்டியுள்ளார் (தொல். பொருள். 111). ஆயினும், நூற்பெயரை அவரும் சுட்டினாரல்லர். இங்ஙனமாகவே, இச் செய்யுள் இந் நூலின் பகுதியென்று உறுதியாகக் கொள்ளுவதற்கு இல்லை. எனினும், முற்பதிப்பில் இருத்தல் பற்றிநூல் இறுதியில் இப் பாடலும் தனியாக இணைக்கப் பெற்றிருக்கிறது.

இந்நூல் செம்பாகமான தெள்ளியநடையை மேற்கொண்டுள்ளது.

சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய், ஊன்றி,
வலி ஆகி, பின்னும் பயக்கும் (5)

பெருத் தகு தாளாண்மைக்கு ஏற்க,
அரும் பொருள் ஆகும் (29)

என்றாற் போன்ற சிறந்தகருத்துகள் சில அங்கங்கே உள்ளன. அக்காலப் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், முதலியனவும் இந் நூலால் புலனாகின்றன.

இந் நூற் செய்யுட்கள் பலவற்றை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலியோர் தத்தம் உரைகளில் எடுத்தாண்டுள்ளனர். பழைய உரையும் கிளவிக் குறிப்புகளும் முதல் 24 பாடல்களுக்கே கிடைத்துள்ளன.

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “ஐந்திணை எழுபது மூலமும் உரையும்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

ஐந்திணை எழுபது மூலமும் உரையும்
ஐந்திணை எழுபது மூலமும் உரையும்
Tamill eBooks Org
Logo
Register New Account
Reset Password
Shopping cart