களவும் (களவோடு) கற்ற காதல் PDF Download

களவும் கற்ற காதல் PDF Free Download

களவோடு கற்ற காதல் (Kalavodu Katra Kaadhal) என்ற நாவல் ஸ்ருதிவினோ அவர்களால் எழுதப்பட்டது. சிலர் இதை களவும் கற்ற காதல் எனவும் தவறாக குறிப்பிடுகின்றனர். எது எப்படியோ, இந்த நாவல் இங்கு இலவசமாக PDF வடிவில் பதிவிறக்க இணைக்கபத்துள்ளது.  முழு நாவலும் வாங்கி படிக்க pustaka.co.in/sruthivino என்ற ஆசிரியரின் பக்கத்தை அணுகவும் அல்லது சுருதிவினோ அவர்கள் நாவல்களை அமேசான் பக்கத்தில் வாங்கி ஆசிரியரை ஊக்குவிக்கவும்.

களவும் கற்ற காதல் PDF Read Online

பொருளடக்கம்: களவும் (களவோடு) கற்ற காதல்

களவு 1

களவு 2

களவு 3

களவு 4

களவு 5

களவு 6

களவு 7

களவு 8

களவு 9

 

களவு 1 : களவும் கற்ற காதல் 

முழு நிலவின் முக்கால் பகுதி மேகக்கூட்டத்தில் மறைந்து கிடக்க, ஆணாதிக்கம் என்பது ஆகாயத்திலும் உண்டு போலிருக்கிறது…!

திரண்ட மேகக்கூட்டங்களுக்கு நடுவே திணறி தவித்துக் கொண்டிருந்தாள் நிலாப் பெண். மறைவதும் மீள்வதுமாக தனது சுயத்தை உலகுக்குத் தெரிவிக்க போராடிய நிலாப் பெண்ணை மீட்கத்தான் அங்கே ஆளில்லை.

பெரும் போராட்டதிற்குப் பிறகு தானாக மீண்டு வந்ததை வரவேற்கும் விதமாக கண் சிமிட்டிய நட்சத்திரக் கூட்டமோ நட்புப் பூக்களாய் மின்ன, தன்னிலிருக்கும் கலங்கமே ஒரு கவிதையின் வித்தாக முழுவதுமாக ஒளிர்ந்தாள் நிலாப் பெண்.

இந்த பவுர்ணமி நாளில் உடுப்பியின் மல்பே கடற்கரை அழகைக் காண கூட்டம் கூடியிருந்தாலும், தொலைவில் தனியொருவனாக நின்று நீலவானை நோக்கிக் கொண்டிருந்தான் சத்யன் சிபி என்று அனைவராலும் அழைக்கப்படும் சத்யன் செபாஸ்டியன்.

சத்யன் சிபி, வயது முப்பத்தொன்று, இந்தியாவில் செயல்படும் கிறிஸ்தவ மிஷன் ஒன்றின் நேரடி மேற்பார்வையில் சென்னை லயோலாவில் பிஏ ஆங்கில இலக்கியம் படித்து கோல்டு மெடல் பெற்று, பிறகு டெல்லி நேஷனல் லா யுனிவர்சிட்டியில் LLM எனப்படும் சட்டப்படிப்பு படித்து, அதே யுனிவர்சிட்டியில் கார்ப்ரேட் லாவில் டாக்ட்ரேட் முடித்து கோல்டு மெடல் பெற்றவன்.

கோவையை பூர்வீகமாகக் கொண்டு, பெங்களூரில் அலுவலகம் வைத்திருக்கும் இவன், தென்னிந்தியாவின் சில பிரபல கம்பெனிகளின் மிகப் பெரிய சட்ட ஆலோசகர்.

பிரமாண்டம் அவன் படிப்பில் மட்டுமல்ல, தோற்றத்திலும் அழகிலும் தான். ஆறடி நான்கு அங்குல உயரத்தில் அகன்ற மார்பும் திரண்ட தோள்களும் கூடுதல் சிறப்பாக, ரோமங்களற்று பாறை போன்று இறுகிய அவனது நீள் சதுர முகம் கண்ட எவராயினும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து பிறகு தான் நிதானப் படுவார்கள். தென்னிந்தியாவின் டாப் லிஸ்ட்டில் இருக்கும் சில இளம் பெண்களின் கனவு நாயகன் இவன்.

கிரேக்கச் சிலையாக நின்றிருந்தவனின் உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தின் கண்களில் மட்டும் ரத்த வரிகள். கருநீல நிற சூட், கருநிற பூட்ஸ், வெந்நிற சட்டை, கருநீல டை என மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டியபடி சிலையாக நின்றிருந்தவனிடம் சிறு சலனம்.

கழுத்தை இறுக்கிய டையின் முடிச்சை தளர்த்தியவாறு, சற்று தள்ளி நின்று இவனது கோட்டை கையில் வைத்தபடி இவனையே பார்த்திருந்த தீனாவை சைகையால் அழைத்து, லுக் அட் தட் மேன்… என்று நிலவைக் காட்டினான் சத்யன் சிபி.

நிலவை நிமிர்ந்துப் பார்த்து விட்டு மீண்டும் இவனை நோக்கி, யெஸ் பாஸ்…? என்றான் தீனா.

நீட்டிய விரல் நிலவை நோக்கியே இருக்க, இந்த நிலாவில் என் அம்மா முகம் தெரியுது தீனா… என்றவனின் குரலில் இருந்த துயரம் மட்டுமே தீனாவுக்குப் புரிந்தது போல.

தனது இடத்தை விட்டு அசையாமல் நின்றபடி பக்கவாட்டில் பார்வையோடு விரலை அசைக்க, அந்த அரை இருளில் எங்கிருந்தோ கருப்பு உடை அணிந்த இருவர் வந்து சத்யனின் இருபுறமும் நின்று, லெட்ஸ் கோ பாஸ்… என்றனர்.

அவர்களை சில நிமிடம் உற்று நோக்கியவன் சிறு தலையசைப்புடன் அங்கிருந்து அகல, அவன் பின்னால் மற்ற மூவரும் பாதுகாப்பான தூரத்தில் வந்தனர்.

அவனது கருநீல நிற லாம்போகினி அட்வெண்டேடரின் ஓட்டுனர் இருக்கையில் அமரப் போனவனைத் தடுத்து தலை குனிந்து நின்றிருந்தான் தீனா.

அவனை முறைத்து விட்டு கார் சாவியை வீசியடித்து விட்டு மறுபுறம் வரும் முன் இவனது பாடிகார்ட்ஸில் ஒருவன் கார் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தான்.

காரில் ஏறி சீட் பெல்ட் அணிந்தவன், மஹிஷாவை எப்போ மீட் பண்றோம் தீனா…? என்றுக் கேட்டான்.

யெர்லி மார்னிங்… செவன் தர்ட்டி பாஸ்…

ம்ம்… என்றபடி காரிலிருந்த ரெக்கார்டரை ஓட விட்டான். அடுத்த நாளைக்கான அவனது அலுவல்களை அழகான ஆங்கிலத்தில் பெண் குரலில் அறிவித்தது அந்த ரெக்கார்டர். கேட்டு முடித்து கண்மூடி இருக்கையில் சாய்ந்தவனின் கண்களுக்குள் மஹிஷா, இவனது ஆருயிர் காதலி.

இவனுக்காக ஏங்கிக் கிடந்த பெண்களுக்கு மத்தியில் இவனே ஏங்கித் தவித்து காதலித்தப் பெண் தான் மஹிஷா எனும் மச்சக்காரி.

பேரழகி என்ற வார்த்தையின் பெரும் பகுதிக்குச் சொந்தக்காரி. இரு வருடங்களுக்கு முன்பு தொழில் தொடர்பாக மஹிஷாவின் தந்தை அகிலேஷை சந்திக்கச் சென்ற போது தான் அவளை சந்தித்தான். அன்றே மான் விழிகள் உருள, மையலாக சிரித்தவளின் சிரிப்பில் மயங்கி உயிர்ப்பைத் தொலைத்தவன் சத்யன்.

அதுவரை தனக்காக என்ற அவனது சிந்தனைகளை மாற்றி அவளுக்காகவும் என தன்னையே மாற்றிக் கொண்டவன். அவளை ஒரு மகாராணியாக வாழ வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தின் முதல் படி தான் நாளைய அவர்களது சந்திப்பின் முக்கியத்துவம்.

உடுப்பியிலிருந்து அறுபத்தைந்தாவது கிலோமீட்டரில் இருந்த மலை பிரதேசமான ஆகும்பேயில் தான் சத்யனின் தற்போதைய வாசம்.

தனி பங்களாவில் தனித்திருந்தவனை சந்திக்க அவனது காதலி வருகிறாள் அதிகாலை. பேச வேண்டும், ஏற்கனவே பேசி வைத்தது தான். இருப்பினும் மீண்டும் ஒரு முறை பேச எல்லாவற்றையும் முடிவு செய்ய வேண்டும்.

ஏழு நட்சத்திர அந்தஸ்தில் இருந்த அவனது அறைக்கு வந்து படுக்கும் வரை உடனிருந்த தீனா, லேட் நைட் ஆகிடுச்சு பாஸ்… ப்ளீஸ்… ஸ்லீப் வெல்… என்றான்.

அவனுக்கொரு தலையசைப்பைத் தந்து விட்டு தனது படுக்கைக்குச் சென்று வீழ்ந்தான் சத்யன் சிபி.

மஹிஷா… மை லவ்… என்று அவனது உதடுகள் உச்சரித்த அந்த வேளை அவனது மொபைல் அழைத்தது. மஹிஷா தான் அழைத்திருந்தாள்.

லண்டனிலிருந்து நேரடியாக மங்களூர் வந்து அங்கிருந்து காரில் இவனிருக்கும் இடம் வருகிறாள் இவனது காதலி.

ஆன் செய்ததும், மஹி… என்ற இவனது சொக்கும் அழைப்புக்குப் பிறகு, ட்ரிங்க் பண்ணிருக்கியா சத்யன்…? என்று கேட்டாள் மஹி.

யெஸ்… மை லவ்… நாளை எடுக்கப் போகும் முடிவுக்காக இன்று தயாராகிறேன்… என்றான்.

எதிர்முனையில் சிறு மவுனத்திற்குப் பிறகு, டோன்ட் வொர்ரி பேபி… நாம ஜெயிக்கப் பிறந்தவங்க என்றாள் கர்வமாக.

யெஸ்… யெஸ்… யெஸ்… ஜெயிக்கப் பிறந்தவங்க நாம்… அதற்காக எதற்கும் துணிவோம்… என்றான் சத்யன்.

ஓகே பைன்… டோண்ட் டாக் எனி மோர்… வில் டாக் ஒன்ஸ் ஐ ரீச் தேர்… என்றாள் மஹி.

ம்ம்… என்றுக் கூறி, சில முத்தங்களை அவளுக்கு அளித்து விட்டு தனது மொபைலை அணைத்து படுக்கையில் விழுந்தவன், சில நிமிடங்களிலேயே உறங்கிப் போனான்.

அதுவரையிலும் அறை வாயிலில் நின்றிருந்த தீனா தனது அறைக்குச் சென்றான்.

தீனா, சத்யனுக்கான சேவையை தவமாகச் செய்பவன். உதவியாளன் மட்டுமல்ல அவனது பாதுகாப்பும் இவனைச் சார்ந்ததே. சத்யனை நெருங்கும் ஆபத்துகளை நொடியில் உணர்ந்து தகர்ப்பவன்.

இவனுக்கு கீழாக பரத், சீலன் என்ற இருவர். இவர்கள் சத்யனது பாதுகாப்புக்காக நியமிக்கப் பட்டவர்கள். சத்யனது ரகசிய வேலைகளையும் கனக்கச்சிதமாக முடித்து தருபவர்கள்.

இவர்கள் மூவரையும் தாண்டித் தான் யாரும் சத்யனை நெருங்க முடியும் என்பதே நிதர்சனம்.

மறுநாள் காலை ஆறு நாற்பதுக்கு, சத்யனது ரெஸார்ட்டின் வாசலில் வந்து நின்றது மஹிஷாவின் பென்ஸ்.

தயாராக நின்றிருந்த தீனா, கார் கதவைத் திறந்து விட, தாங்க்ஸ் தீனா… என்று விட்டு இறங்கியவளின் கைப் பெட்டியை வாங்கியவன் அவளை நிமிர்ந்தும் பார்க்காது, உங்களுக்கு செவன் தர்ட்டிக்கு அப்பாயின்ட்மெண்ட்… அதுவரை உங்களுக்கான ரூம்ல இருக்கலாம் என்றான்.

காதலனை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட்டா…? ஆத்திரமாக வந்தது. அடக்கியபடி, யூ… ராஸ்கல்… என்று ரகசியமாக மொழிந்து விட்டு முன்னால் சென்றவளின் பின்னால் சென்றான் தீனா.

சரியாக 7.28க்கு மஹிஷாவின் கைபேசி அழைத்தது. தீனா தான், ஐ ஆம் வெயிட்டிங் அட் யுவர் டோர் ஸ்டெப்ஸ் மேம்… என்றான்.

‘அவனை காக்க வைக்கலாமா?’ என்ற சிந்தனையை சத்யனைக் காணும் ஆர்வம் விரட்டியடிக்க வேகமாக சென்று கதவைத் திறந்தாள்.

தலை குனிந்து தனது பணிவைத் தெரிவித்தபடி முன் நோக்கி கையை நீட்டியபடி அவன் செல்ல, பின்னால் சென்றாள் மஹி.

சத்யனின் அறைக் கதவு திறந்த மறுநொடி உள்ளே சென்றதும் பாதுகாப்பு கருதி உடனே கதவடைத்தான் தீனா.

மார்புக்குக் குறுக்காக கைகளை கட்டியபடி அவளை எதிர் நோக்கிக் காத்திருந்த சத்யன் முகம் மலர கைகளை விரித்தான்.

கால்களின் எட்டுகளை வேகப்படுத்தி அவனது கைகளுக்குள் வந்து புகுந்தாள் மஹி. அடுத்த நொடி குனிந்து அவளது இதழ்களை சிறையெடுத்தான் வழக்கமான காதலனாக.

தேன் சிந்தும் அதரங்களை சுவைத்து நாட்களாகிப் போனதாலோ என்னவோ சுவை கூடிப் போயிருந்தது. நீண்ட முத்தத்திற்குப் பிறகு நான்கு உதடுகளும் சோர்வாகிப் பிரிந்தன.

மை லவ்… என உணர்வுகள் கொட்டிய வார்த்தையோடு அவளை இறுக்கி அணைத்தான். அவளுக்கும் அவனது அணைப்பு தேவை என்பது போல் புதைந்து போனாள்.

அவளின் கட்டை கூந்தலுக்குள் இவனது விரல்கள் விளையாட, சட்டெனக் கைகளில் அள்ளிக் கொண்டு படுக்கைக்குச் சென்றான் சத்யன்.

அகன்ற படுக்கையில் ஓரமாக அவளைக் கிடத்தி விட்டு அவள் மீது படர்ந்தான். அந்தக் காலை வேளையில் காமன் வந்து தனது பணியினை துவங்க, அங்கே அசுர வேகத்தில் ஆடைகள் களையப்பட்டது.

மஹிஷா லண்டன் சென்று நான்கு மாதங்கள் ஆன நிலையில் அவர்களது இன்பப் பசி இறைச்சிப் பசி போல் ஆனது அவ்விடத்தில். சத்யனது ஆளுமையும், மஹியின் வனப்பும் மீண்டும் மீண்டும் உறவுக்கு ஒன்று கூட வைத்தது.

ஓய்ந்து விழுந்தவனை ஒய்யாரமாகப் பார்த்து சிரித்தவள், உனக்கு என்னாச்சு பேபி…? அதுவும் யெர்லி மார்னிங்ல இப்படி…? என்றுக் கேட்டாள்.

எழுந்து அமர்ந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையை ஆழ்ந்து இழுத்தவன், தெரியலை மஹி… நாம மீட் பண்ண இந்த ட்டூ இயர்ஸ்ல நான் இவ்வளவு டிஸ்டர்ப்டா இருந்ததேயில்லை என்றவன், மீண்டும் ஒரு முறை புகையை இழுத்து விட்டு சிகரெட் துண்டை ஆஸ்ட்ரேயில் நசுக்கியபடி, நடக்கப் போகும் சம்பவங்கள் என்னை இப்படி ஆக்கிடுச்சு போல… என்றான்.

மெத்தையில், மேல் விரிப்பில் தனது உடலை மறைத்தபடி எழுந்து அமர்ந்த மஹி சத்யனது தோள் வளைவில் சாய்ந்து, உனக்காக நான் எதையும் செய்வேன் சத்யன். உன்னைக் காதலித்த பெண்களை ஒதுக்கி விட்டு என்னைக் காதலித்தவன் நீ. என் உயிர் போவதானாலும் அது உனக்காகத் தான் இருக்கும்… என்றாள்.

அவளை உற்று நோக்கிய சத்யனது விழிகளில் லேசான ஈரம் திரையிட, ஆனால்… உன்னையே நான் பணயமாக வைப்பது சரியா…? என்றுக் கேட்டான்.

மஹியிடத்தில் சில நிமிடங்கள் மவுனம். அவனை விட்டு விலகிச் சென்று குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

களவும் கற்ற காதல்

களவும் கற்ற காதல் by ஸ்ருதிவினோ

அவள் வருவதற்குள் இவன் மேலும் இரண்டு சிகரெட்டுகளை புகைத்து முடித்திருந்தான்.

திரும்பி வந்தவளின் முகம் கழுவி துடைக்கப்பட்டிருக்க, வேகமாக எழுந்து சென்று அவளது முகத்தை கைகளில் ஏந்தி, அழுதியா மஹி…? என்றுக் கேட்டான்.

அவன் கேட்டதாலேயே நின்றிருந்த அழுகை மீண்டும் மடை திறக்க சத்யனை இறுக்கி அணைத்து நெஞ்சில் முட்டிக் கொண்டு கதறியவள், என்னால இன்னொரு பெண் கூட உன்னை வச்சுப் பார்க்கவே முடியலை சத்யா… என்றாள் குமுறலாக.

சத்யனின் கண்களிலும் கண்ணீர், அவனது ஆத்மார்த்தமான காதலி மஹிஷா. அவளை விட்டு விட்டு இன்னொருத்தியின் கரம் பிடிக்கப் போகிறான். பணத்திற்காக, கோடிக்கணக்கான சொத்திற்காக, சமூகத்தில் கிடைக்கப் போகும் மிகப் பெரிய அந்தஸ்திற்காக.

ஆம், பணம் தான், பணம் மட்டுமே தான் இந்த இருவரது ஒட்டு மொத்தக் குறிக்கோளுமே. இவர்களது துவக்கம் காதலாக இருந்தாலும் தொடக்கம் பணம் மட்டுமே பிரதானமாக இருந்தது.

‘உனக்காக’ என்ற வார்த்தைக்கு அர்த்தமே இவர்கள் என்றும் கூறி விட முடியாது. ஐம்பது சதவிகித சுயநலத்துக்கிடையே காதலும் வந்து புகுந்து கொண்டது என்பதே நிஜம்.

தகப்பனின் கோர மரணதிற்குப் பிறகு இரும்பாகிப் போன உணர்வுகளுடன் பணம் சம்பாதிக்க மட்டுமே படிப்பு. குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் சொத்தை அபகரிக்க மட்டுமே தனது பதவி என பிறப்பிலிருந்தே தன்னை வரையறுத்துக் கொண்டவனின் காதலியாக வந்த இந்த மஹிஷாவுக்கும் ஆசை தான், சத்யன் அபகரிக்க இருக்கும் சொத்துக்கு தாமும் அதிபதியாக வேண்டும் என்பதே.

இந்தியாவின் முன்னணி நிறுவனமான கே ஜே குரூப் ஆப் கம்பெனியின் சேர்மன் பரமேஸ்வர். மனைவி பிரவீணாவின் பெயரில், மகள் இஷிதாவின் பெயரில், மகன் இஷானேஸ்வரின் பெயரில் என ஒட்டு மொத்தமாக கம்பெனியின் பங்குகளில் அறுபது சதவிகிதத்தை தன் வசம் வைத்திருப்பவர்.

அகிலேஷ், மஹிஷாவின் அப்பா. கேஜே நிறுவனத்தின் மிச்சமிருந்த நாற்பது சதவிகித பங்குகளை தனது பெயரில் வைத்திருப்பவர்.

சத்யன் சிபி, இவனது சட்ட ஆலோசனையின் கீழ் செயல்படும் பல கம்பெனிகளில் முதன்மையானது கேஜே குரூப்ஸ். இந்தியாவின் பல பெரு நகரங்களில் செயல்படும் பல கட்டு மானங்களில் பெரும்பான்மையானவை இந்த நிறுவனத்திற்கு சொந்தமானது.

களவும் கற்ற காதல்

ஸ்ருதிவினோவின் மேலும் பல நூல்கள்

சத்யனது ஆலோசனைகள் அத்தனையும் பரமேஸ்வரை உச்சத்துக் கொண்டு செல்ல, அந்த நிறுவனத்தில் அவனது மதிப்பு அவருக்கு நிகராக இருந்தது என்பது நிஜம்.

பங்குகளில் ஏறக்குறைய இருக்க, இரு குடும்பமும் நண்பர்களும் அல்ல விரோதிகளும் அல்ல என்பது போல பழகி வந்த நிலையில் பரமேஸ்வர்க்கு ஆசை, கம்பெனியின் மொத்த பங்குளும் தன் குடும்பத்துக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பது தான்.

அதற்கான ஆலோசனையை சத்யனிடம் கேட்டது தான் அவரது துரதிர்ஷ்டம். அவரை அழிக்கவே உருவானவன் சத்யன் என்பது அவனைத் தவிர யாரும் அறியாத நிலையில் ஆலோசனைக்காக அவனிடமே வந்து நின்றார் பரமேஸ்வர்.

உள்ளே எக்களிப்புடன் சிரித்தாலும், வெளியே பெரும் பணிவுடன், நானும் யோசிச்சேன் சேர்மன்… எனக்கு சில யோசனைகள் இருக்கு… அது சரியாக வருமா பாருங்க சேர்மன்…என்றான்.

அவன் கூறிய முதல் ஆலோசனை, அகிலேஷின் மகள் மஹிஷாவை பரமேஸ்வரின் மகன் இஷானேஸ்வர் என்கிற ஈஸ்வருக்கு மணமுடிக்க பேச்சு வார்த்தை நடத்துவது என்பது.

அதாவது தனது உயிர் காதலி மஹிஷாவை சொத்துக்காக பரமேஸ்வரின் மகன் ஈஸ்வருக்கு கொடுக்க இவன் திட்டமிட்டிருந்தான்.

அவனை வியந்து நோக்கிய பரமேஸ்வர், நானும் இதைத்தான் யோசித்தேன் சத்யன். ஆனால் எப்படி செயல்படுத்துவது? ஈஸ்வரோட நிலைமை உங்களுக்குத் தெரியுமே சத்யன்…? என்று கவலையுடன் கேட்டார்.

யோசிப்பது போல் தனது சலவைக்கல் தாடையைத் தடவியவன், ஈஸ்வர் பத்தி ஓரளவுக்கு வெளியே தெரிஞ்சிருந்தாலும் யாருக்கும் முழுசா தெரியாது சேர்மன். அப்படியே இருந்தாலும் அதைப்பற்றி அகிலேஷ் சார்கிட்ட நான் பேசுறேன்… என்றான் உத்திரவாதமாக.

சம்மதமாகத் தலையசைத்தவர், ஈஸ்வர் மஹிஷா மேரேஜ் முடிச்சு ஈஸ்வரை சேர்மன் போஸ்ட்க்கு நிரந்தரமாகக் கொண்டு வந்துட்டா போதும் சத்யன். மற்றதை நான் பார்த்துக்குவேன். என்றார், கண்களில் பேராசையுடன்.

குரூரமாக அவரைப் பார்த்தவன் சட்டென சிரிப்புக்கு மாறி, மஹிஷாவும் எனக்கு பெஸ்ட் பிரண்ட் தான் சேர்மன்… நான் பேசுறேன்… என்றான்.

ம்ம்… நீங்க இருக்கும் தைரியத்தில் தான் இந்த பேச்சையே துவங்கினேன் சத்யன். அப்புறம், ஆறு மாசத்துக்கு முன்னாடியே உங்ககிட்ட ஒரு ரிக்வெஸ்ட் வச்சேன். அதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவேயில்லை வழிசலாகப் பேசினார் அந்த காரியவாதி.

கை முஷ்டிகள் இறுக, அவருக்கு முதுகுக் காட்டி நின்றிருந்தவனின் முகத்தில் அப்படியொரு குரூரம். கீழுதட்டைக் கடித்து மனதை சமன் செய்தான். விறைத்த முதுகை வளைத்து திரும்பிப் பார்த்து சிரித்தான்.

ம்ம்… யோசிச்சேன் சேர்மன்… அகிலேஷ் பேமிலியில் சம்மதம் கிடைச்சிட்டா இரண்டு மேரேஜும் ஒரே டைம்ல கூட வச்சிடலாம்… என்றவனை இடைமறித்தார் பரமேஸ்வர்.

இல்ல சத்யன்… ஈஸ்வர் மஹிஷா மேரேஜ் இப்பதான் பேச ஆரம்பிச்சிருக்கோம். எல்லாருக்கும் பிடிச்சு மேரேஜ் ஏற்பாடுகள் நடக்க நாளாகும். ஆனால்… நீங்க, இஷிதா விஷயம் அப்படியில்லையே…? என் பேமிலியில் அத்தனை பேருக்கும் விருப்பம். கூடுதலாக இஷிதா நீங்க இல்லைன்னா தனக்கு மேரேஜ்ஜே வேணாம்னு சொல்றா சத்யன் என்றார்.

சத்யனிடத்தில் பதில் இல்லாது போகவும் அருகில் வந்து அவனது தோளைத் தொட்டு, சத்யன்… இஷிதா உங்களை விரும்புறா… வீட்டுக்குப் போனதும் அவ கேட்கும் முதல் கேள்வி, ‘சத்யன் என்ன சொன்னார் டாடி’ என்பது தான். நீங்க ஓகே சொன்னால் போதும் அடுத்த வாரத்திலேயே மேரேஜ் வச்சிடுவேன் என்றார் பரமேஸ்வர்.

சத்யனை விட்டுத் தர அவரது மகளுக்கு விருப்பமில்லை என்பதை விட, பெண்ணைக் கொடுத்து சத்யனை தன்னருகில் வைத்துக் கொண்டால் இந்த உலகையே விலை கூறலாம் என்ற கனவு இவருக்கு.

சில நிமிட யோசனைக்குப் பிறகு, சரி… செய்ங்க சேர்மன். ஆனால் மேரேஜ் ஒரு வாரத்தில் வேணாம். ஒரு மாதமாவது டைம் எடுத்துக்கோங்க என்றான்.

அந்த நிமிடம் உலகின் முதல் கோடீஸ்வரனாக தன்னை உணர்ந்தார் சேர்மன் பரமேஸ்வர். சத்யனை இறுக்கி அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்து, வெல்டன் சத்யன் சிபி… என்றார்.

புன்னகையுடன் தலையசைத்து, நான் கிளம்புறேன் சேர்மன். பைவ் தர்டிக்கு ஹோம் மினிஸ்டர் கூட அப்பாயின்ட்மெண்ட் இருக்கு என்றுக் கூறி விட்டு அங்கிருந்து வெளியேற திரும்பியவனைத் தடுத்து, நாளைக்கு என் வீட்டுக்கு வரனும் சத்யன்… ஒரு முறை மட்டும் சம்பிரதாயத்துக்கு வந்து இஷிதாவை பார்த்துடுங்க… பிறகு நேராக மேரேஜ் ஹால் வந்தால் போதும் என்றார் கெஞ்சலாக.

எந்தவித யோசனையுமின்றி,நாளை டைம் இருக்கா என்று தீனா கிட்ட கேட்டுட்டு வர்றேன் சேர்மன்என்றுக் கூறி அங்கிருந்து வெளியேறினான்.

இப்படித்தான் சத்யன் மஹிஷா என்ற காதலர்களின் திருமணம் வேறு வேறு நபர்களுடன் அவர்களாலேயே நிச்சயிக்கப்பட்டது, பணத்துக்காக.

காதலர்களாக பிரிய முடியாமல் கட்டியணைத்துக் கண்ணீர் சிந்தியவர்களின் வாழ்வின் முதல் திருப்பம் நாளை தான் ஆரம்பம். நாளை தான் பரமேஸ்வர், அவரது இரண்டாவது மனைவி பிரவீணா, இவர்களின் செல்ல மகள் இஷிதா எனப்படும் இஷாவை சந்திக்கப் போகிறான் சத்யன்.

மனமும் பணமும் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாதது என்பதன் அர்த்தமே இவர்களிடத்தில் இருந்து தான் புதிதாக உருவாகிறது போல.

மஹிஷாவை விட்டு விலகிச் சென்று அங்கிருந்த டிரஸிங் டேபிளின் முன்பு நின்று கலைந்து கிடந்த கேசத்தை கை விரலால் சரி செய்தபடி, நெக்ஸ்ட் சன்டே நீயும் ஈஸ்வரும் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கேன் மஹி…என்றவனின் குரலில் இருந்த துயரம் சொல்லி மாளாது.

மஹிஷாவிடம் பதில் இல்லை. இவள் ஈஸ்வரை சந்திப்பதை விட, சத்யன் இஷிதாவை திருமணம் செய்வது தான் இவளுக்கு பெரும் துயரம்.

ஈஸ்வர் சற்று மனநிலை சரியில்லாதவன் என்பதால் திருமணமே ஆனாலும் மஹிஷாவால் அவனை விலக்குது சுலபம். ஆனால் இஷிதாவை விலக்குவது சுலபமல்ல. அந்தக் குடும்பத்தின் அதிபுத்திசாலி பெண் மட்டுமல்ல, இஷிதாவை பற்றி இவள் அறிவாள். சத்யனின் மீது அவளுக்கு காதல் என்பதை விட வெறித்தனமான மோகம், ஆசை, என்றே சொல்லலாம்.

இரண்டு முறை நட்பு பயணமாக பரமேஸ்வரின் வீட்டிற்கு இவள் சென்றிருந்த போதெல்லாம் இஷிதாவின் பார்வை சத்யனைத் தவிர வேறு எவரையும் காணாது. பேச்சின் ஒவ்வொரு வரியிலும் அவன் பெயர் வந்து விடும்.

இப்படிப்பட்டவளை சத்யனுடன் இணைப்பது என்பது தனக்கான சிதையை தானே தயார் செய்வது போல தானே?

அவளது மனம் புரிந்தவனாக அருகே வந்து அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து கைகளைப் பற்றி தன் நெஞ்சில் வைத்தான்.உனக்கு இஷ்டமில்லைனா இந்த திட்டத்தையே விட்டுடலாம் மஹி…என்றான்.

அவன் முகத்தையே உற்றுப் பார்த்தவள்,முடியலை சத்யன்… அந்த இஷிதாவை நினைச்சா பயமாருக்கு…என்றாள்.

நோ நோ… எப்பவுமே உன் கூடவே நான் இருப்பேன் மஹி… அந்த வீட்டில் தான் நானும் இருப்பேன்… பரமேஸ்வரோட திட்டமே நான் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்பது தான். அதுதான் நமக்கும் நல்லது. ஒரு நிமிஷம் கூட உன்னைத் தனியாக விட மாட்டேன்என்றான் சத்யன்.

ம்ம்… நானும் உன்னை விட்டு போக மாட்டேன்…

போக வேண்டாம்…என்றவன் எழுந்து அவள் பக்கத்தில் அமர்ந்து,இப்பவே நானில்லாமல் அந்தக் கம்பெனி செயல்படாது என்கிற நிலைமைக்கு கொண்டு வந்துட்டேன் மஹி… பரமேஸ்வரின் முழு நம்பிக்கையும் நான் தான். இஷிதாவை மேரேஜ் பண்ணி கம்பெனியின் ஷேர்ஸ் என் பெயருக்கு மாறியதும் உடனே டிவோர்ஸ் தான். ஈஸ்வரை நீ மேரேஜ் செய்தாலும் விலக்குவது சுலபம் மஹி. அதன் பிறகு நம்ம மேரேஜ் தான். யாரும் என்னை தடுக்க முடியாதுஎன்றவனின் விழிகள் மின்னியதை ரசித்தாள் மஹிஷா.

நீ அந்த சேர்மன் சீட்ல எம்டியாக உட்காரனும் சத்யன். அதுக்காகத் தான் இவ்வளவும்

ஓகே டன்… நீ பெங்களூர் போய் உன் பேரண்ட்ஸ் கூட இரு… ஈஸ்வரோட நிலைமையைக் காட்டி உன் பேரண்ட்ஸ் இந்த மேரேஜை மறுக்கலாம்… நீ தான் அதை சமாளிக்கனும்… நான் மற்றவற்றை பார்த்துக்கிறேன். என்னோட போன் கால்க்காக எப்பவும் காத்திரு. ஏதாவது அவசரம்னா தீனா உன்னை மீட் பண்ணுவான். எந்தக் காரணம் கொண்டும் என்னை சந்திக்க ட்ரை பண்ணாத. நானே உன்னைத் தேடி வருவேன்

அதன் பிறகு இருவரும் தயாராகி, ஆர்டர் செய்த உணவுக்காக காத்திருந்த வேளையில் சத்யனின் கைப் பேசியில் ……

ஸ்ருதிவினோ நாவல்கள் அமேசானில் வாங்க:

சுருதிவினோ அவர்கள் நாவல்களை அமேசான் பக்கத்தில் வாங்கி ஆசிரியரை ஊக்குவிக்கவும்.

 

Tags:

We will be happy to hear your thoughts

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

Tamill eBooks Org
Logo
Register New Account
Reset Password
Shopping cart