இராவண காவியச் சிறப்பு

இராவண காவியச் சிறப்பு

இராவண காவியம் நூலின் பெருமையைச் சுருங்கச் சொல்வதானால், இதனைத் தமிழிலக்கியத்தின் சாறு என்றே கூறலாம்.”

– மு கருணாநிதி

 

அறிஞர் அண்ணா அவர்கள்

“இராவண காவியம் – பழமைக்குப் பயணச் சிட்டு; புதுமைக்கு நுழைவுச் சீட்டு; தன்மான இயக்கத்தார் தமிழ்ப் பகைவர்கள்; காவியச்சுவை யறியாதார், கலையுணர்வில்லாதார் என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றலாயுதம், தமிழ் மறுமலர்ச்சியின் தலைசிறந்த நறுமலர்; நெடுநாள் ஆராய்ச்சியும், நுண்ணிய புலமையும், இனப்பற்றும் ஒருங்கமைந்த ஓவியம்! தமிழரின் புத்துணர்வுக்கான போர் முரசு! காவிய உருவில் ஆரியத்தைப் புகுத்திவிட்டோம்; எனவே, இது அழிந்து படாது என்று இறுமாந்திருப்போர்க்கு ஓர் அறைகூவல் ; தமிழர்க்கு உண்மையை உணருமாறு கூறும் ஓர் அன்பழைப்பு; தமிழரசுக்குக் கால்கோள்; விடுதலைக் கீதம்.’  முழுவதும் படிக்க

 

டாக்டர் கலைஞர் அவர்கள்

“எழுத்துமுத லைந்தினும் பழுத்த வாய்மொழிப் பாவலரான புலவர் குழந்தை அவர்கள், இராவணன் ஏற்றங் கூறும் இராவண காவியத்தை இயற்றித் தந்து, இருபதாம் நூற்றாண்டில் மாகாவி யங்கள் வெளிவரவில்லை என்ற குறையை நிறைவு செய்தார்கள்.

இராவணனை இரக்கமென்றொரு பொருளிலா அரக்கர்தம் தலை வனாகக் கவியரசன் கற்பித்த மாசினைப் போக்கிப் புலவர் குழந்தை அவர்கள், ‘மாசறு பொன்னாக, வலம்புரி முத்தாக, மாசிலாத் தமிழ் மாக்கதையாக’ இராவண காவியத்தை இயற்றித் தந்தார்.

தமிழில் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களையும், இராமாய ணம், பாரதம், காஞ்சிப் புராணம், தணிகைப் புராணம் ஆகியவற் றின் இலக்கிய நயங்களையும் விஞ்சிய கலைநயமும், காவிய அழகும், உணர்ச்சிப் பெருக்கும், ஓசையின்பமும் கனிந்து மிளிரும் ஒரு பெருங்கருவூலமாகத் திகழ்கிறது இராவண காவியம். இந் நூல் சொல்லோசைப் பாடல்களின் சுரங்கமாக விளங்குகிறது.

இந்தப் பாடல்களின் வெற்றிக் குறிப்பினையும், சொற்சிற்பத் தையும் தமிழிலக்கியங்களில் வேறெங்கும் காண்பதரிது. இச்செஞ் சொற்கவியின்பத்தில் மூழ்கித் திளைக்காதார் யாரே!

இராவண காவியம் நூலின் பெருமையைச் சுருங்கச் சொல்வதானால், இதனைத் தமிழிலக்கியத்தின் சாறு என்றே கூறலாம்.”

இராவண காவியம் பற்றி கலைஞர் அவர்களின் ஆராய்ச்சியுரை படிக்க

இராவண காவியம் – கலைஞர் கருணாநிதி

 

நாரண துரைக்கண்ணன் அவர்கள்

(‘பிரசண்ட விகடன்’ ஆசிரியர்)

“தமிழ் இலக்கியத்தின் அணிகலமாய் இருக்கத்தக்க அருமையான காவிய நூல் – இராவண காவியம்.”

காஞ்சி மணிமொழியார் அவர்கள்

(‘போர்வாள் ஆசிரியர்)

“கரும்பு என்றால் சாதாரணக் கரும்பு அல்ல; அது கிடைத் தற்கு அரியது; ஒவ்வொரு கணுவிலும் ஒரு கடல் இன்பம் செறிந் துள்ள பெற்றிவாய்ந்தது; தேனில் ஊறி எழும் இன்சுவை, தென்ற லில் தவழ்ந்துவரும் ஆனந்தம், யாழில் தெறிக்கும் நல்லிசை, செந் தமிழில் ஒளிவீசும் கருத்துச் செதில்கள். இவ்வளவையும் கூட்டி எடுத்து வடித்து இறக்கிய சுவைமிகு பொருள் போன்றது அந்தக் கரும்பின் சாறு. அந்தக் கரும்புக்கு நாட்டிலே வழங்கும் பெயர் இராவண காவியம் என்பது; தமிழ் மக்கள் உள்ளத்திலே குடி யேறிவிட்ட பெயர் திராவிட நாகரிகத்தின் அடையாளச் சின்னம் என்பது.”

சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை

“தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை! நான் கம்பராமா யணக் கவிச்சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்துவிட்டது. கருத்து மாறுபாடு வேறு”

புலவர் ஐயன் பெருமான் கோனார் (கம்பராமாயண அன்பர்)

“இனியொரு கம்பனும் வருவானோ இப்படியும் கவி தருவானோ? கம்பனே வந்தான்; அப்படிக் கவிதையும் தந்தான். ஆனால், கருத்துத்தான் மாறுபட்டது.”

We will be happy to hear your thoughts

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

Tamill eBooks Org
Logo
Register New Account
Reset Password
Shopping cart